Annaatthe | இது காளையன் மாஸ்! 1மில்லியனைத் தாண்டிச்சென்ற அண்ணாத்த ட்ரெயிலர்.!
அண்ணாத்த ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரத்துக்குள் 1மில்லியன் பார்வையாளகளை கடந்துள்ளது
சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் அண்ணாத்த, ரஜினியின் சினிமா பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய திரையுலகினரால் தலைவா என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் , தீபாவளி சரவெடியாக களமிறங்கவுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’ இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகள் மட்டுமல்லாது 90 களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்பு , மீனா உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதும் , இமான் இசையமைத்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதகளப்படுத்தியது நாம் அறிந்ததே . இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ட்ரைலர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரத்துக்குள் 1மில்லியன் பார்வையாளகளை கடந்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ட்ரெய்லரை லைக் செய்துள்ளனர். 2ஆயிரம் பேர் ட்ரைலருக்கு டிஸ்லைக் செய்துள்ளனர்.
வழக்கமாக எதாவது ஒரு செண்டிமெண்ட்டை கையில் எடுக்கும் சிவா, இப்படத்தில் அண்ணன் - தங்கை செண்டிமெண்டை கையிலெடுத்துள்ளார். அண்ணனாக ரஜினியும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ரஜினியை மாமா, அத்தான் என உரிமையோடு அழைக்கும் குஷ்பு, மீனா இருவருமே ரஜினியின் முறைப்பெண்ணாக நடிப்பதாக தெரிகிறது. பக்கா கிராமத்து கதையாக உருவாகியுள்ள அண்ணாத்த பக்கா மசாலா திரைப்படம் என்பதை ட்ரைலர் பக்காவாக உணர்த்துகிறது. குடும்ப செண்டிமெண்ட், வில்லன், மாஸ் காட்சிகள், காதல் என அனைத்துமே இப்படத்தில் இடம்பெறும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்கிறது அண்ணாத்த ட்ரைலர். அதுதான் சிவாவின் பாணியும் கூட.
Inniku aarambikudhu thiruvizha 🔥
— Sun Pictures (@sunpictures) October 27, 2021
1 Mil views & counting
▶ https://t.co/fsOTrObxcS#AnnaattheTrailer @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/3PbSs38zCL
அண்ணாத்த ட்ரைலரை திரையுலகைச் சேர்ந்த பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
Vera Level Mass Thalaivaaa @rajinikanth 💥💥
— Sakshi Agarwal (@ssakshiagarwal) October 27, 2021
Ppakka Entertainer for this blasting festival 😍😍#AnnaattheTrailer
All the best @directorsiva sir & Team 💐 @sunpictures https://t.co/dFy2bwZf9h
Annathe !!! Vintage rajinism!!! So excited to see thalaivar in muthu, arunachalam , padayappa vibes. Can’t wait to see his magic on screen yet again. Vaa saami !! This Diwali 🪔 💥 💥 💥 STORMING THE THEATRES இது தலைவர் திருவிழா
— Dhanush (@dhanushkraja) October 27, 2021