மேலும் அறிய

ADMK: கோவைக்கு வேலுமணி, தேனிக்கு உதயகுமார்- 40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

கோவைக்கு எஸ்.பி.வேலுமணி, தேனி, ராமநாதபுரத்துக்கு ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் அதிமுகவுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடே மிகவும் எதிர்பார்த்த 18ஆவது மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் யார் யார்?

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. எனினும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிகவுடன் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன. 

தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில், கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற, பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கோவைக்கு எஸ்.பி.வேலுமணி, தேனி, ராமநாதபுரத்துக்கு ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக அலுவலகத்தில் இருந்து பொறுப்புகளை நிர்வகிக்கும் அலுவலராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்‌ பணிக்குழு பொறுப்பாளர்கள்‌ பட்டியல்‌

1. திருவள்ளூர்‌ (தனி) நாடாளுமன்றத்‌ தொகுதி:

டாக்டர்‌ பி. வேணுகோபால்‌, 
அப்துல்‌ ரஹீம்‌,
முன்னாள்‌ அமைச்சர்‌கள் ரமணா, மாதவரம்‌ மூர்த்தி 

சிறுணியம்‌ பலராமன்
அலெக்சாண்டர்

2. சென்னை வடக்கு நாடாளுமன்றத்‌ தொகுதி:
முன்னாள்‌ அமைச்சர்‌ ஜெயக்குமார்‌, 

ராஜேஷ்‌, வெங்கடேஷ்‌ பாபு

3. சென்னை தெற்கு நாடாளுமன்றத்‌ தொகுதி:
முன்னாள்‌ அமைச்சர்‌ கோகுல இந்திரா 
விருகை ரவி, 
தி.நகர்‌ சத்தியா,  அசோக்‌, கந்தன்

4. சென்னை மத்திய நாடாளுமன்றத்‌ தொகுதி:
டாக்டர்‌ தமிழ்மகன்‌ உசேன்‌, 
பாலகங்கா ,
ஆதிராஜாராம்‌,

விஜயகுமார்‌,

அப்துல்‌ ரஹீம்‌,

ஐவஹர் அலி 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி:

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சின்னையா, அப்துல் ரஹீம்

காஞ்சிபுரம் தனி தொகுதி - முன்னாள் அமைச்சர் வளர்மதி

அரக்கோணம் தொகுதி - முன்னாள் அமைச்சர் வீரமணி,

வேலூர் தொகுதி - முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, முக்கூர் சுப்பிரமணியன்

அதிமுக அலுவலகத்தில் இருந்து பொறுப்புகளை நிர்வகிக்கும் அலுவலராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதி - முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி

ஈரோடு தொகுதி - முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.வி.ராமலிங்கம்,

திருப்பூர் தொகுதி - முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பணன், எம்.எஸ்.எம். ஆனந்தன்

நீலகிரி தொகுதி- முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஏ.கே.செல்வராஜ், தனபால்,  

கோவை தொகுதி- முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வேலுசாமி,

அருண்குமார், அர்ஜூனன் எம்எல்ஏ

பட்டியலை முழுமையாகக் காண

இதுகுறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget