Uttarakhand Election 2022 Result: உத்தராக்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் : 10.30 மணி நிலவரம் இதுதான்!
உத்தராக்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராக்கண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#ElectionResultsWithABPNadu | காலை 10.45 மணி நிலவரப்படி உத்தராகண்டில் பாஜக முன்னிலை!https://t.co/wupaoCQKa2 | #Elections2022 #Uttarakhand #UttarakhandElections pic.twitter.com/k9vc5rb5it
— ABP Nadu (@abpnadu) March 10, 2022
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், உத்தராக்கண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது. கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.
#ElectionResultsWithABPNadu | உத்தராகண்டில் பாஜா முன்னிலை!https://t.co/wupaoCQKa2 | #Elections2022 #Uttarakhand #UttarakhandElections pic.twitter.com/HhIyGvz055
— ABP Nadu (@abpnadu) March 10, 2022
இந்தநிலையில், உத்தரக்காண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்