Election Results 2022 LIVE: மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி
Assembly Election Results 2022 LIVE Updates: 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளை இங்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Background
Assembly Election Results 2022 LIVE Updates
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட உள்ளன.
தொடரும் ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்தை
ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது
பஞ்சாப் தேர்தலில் 117 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிப்பு - முதன்முறையாக ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளுக்கும் முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது. அங்கு ஆட்சியமைக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.





















