Urban Local Body Election: ஓசூர் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி போட்டி
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் 45 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டி முன்னால் அமைச்சர் மனைவி கவுன்சிலருக்கு போட்டியிடுகிறார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை படிப்படியாக அறிவித்து வருகிறார்கள். அதன்படி ஓசூர் மாநகராட்சியாக முதல் முதலாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மேயர் பதவிக்கு நடைபெறுகின்றது. இதில் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 32 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
வெளியிட்ட பட்டியலில் ஓசூர் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணன் ரெட்டி பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் வார்டுகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் அதிமுக கட்சி நிர்வாகிகளின் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார். இவர் பாஜகவில் இருந்தபோது 1998 ஆம் ஆண்டு சொந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்ததால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பேருந்து மீது கல் வீசிய வழக்கில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலகியதுடன் தண்டனை பெற்றதால் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இதனை அடுத்து நடந்த ஓசூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ண ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலிலும் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு மீண்டும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் மனைவி ஜோதிக்கு 6வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்
1-வது வார்டில் அசோகா,
2-வது வார்டில் ஸ்ரீதரன்,
3-வது வார்டில் ரஜினிகாந்த்,
4-வது வார்டில் முத்துராஜ்,
5-வது வார்டில் எம்.ராமு,
6-வது வார்டில் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி,
7-வது வார்டில் பிரசாந்த் குமார்,
8-வது வார்டில் மஞ்சுளா,
9-வது வார்டில் கேசவமூர்த்தி,
10-வது வார்டில் சீனிவாசன்,
11-வது வார்டில் ரூபா,
12-வது வார்டில் கலாவதி,
13-வது வார்டில் அனிதா லெட்சுமி,
14-வது வார்டில் சிட்டி ஜெகதீசன்,
15-வது வார்டில் லலிதா,
16-வது வார்டில் மஞ்சுளா,
17-வது வார்டில் கந்தப்பா,
18-வது வார்டு முரளி,
19-வது வார்டில் நடராஜ்,
20-வது வார்டில் சிவராஜ்
21-வது வார்டு சி.பி.மஞ்சுநாத்,
22-வது வார்டு தனகோட்டி,
23-வது வார்டு சந்திரன்,
24-வது வார்டு சரஸ்வதி,
25-வது வார்டு பாரதி,
26-வது வார்டு ஷில்பா,
27-வது வார்டு நாராயணன்,
28-வது வார்டு புருஷோத்தமன்,
29-வது வார்டு தில்ஷாத்,
30-வது வார்டு கிருஷ்ணவேணி,
31-வது வார்டு தாரணி,
32-வது வார்டு புஷ்பா,
33-வது வார்டு யதோதம்மா,
34-வது வார்டு ஆஞ்சம்மா,
35-வது வார்டு ரெங்கேஷ்வரி,
36-வது வார்டு ஜெயலட்சுமி,
37-வது வார்டு வாசுதேவன்,
38-வது வார்டு முருகம்மாள்,
39-வது வார்டு லெட்சுமி,
40-வது வார்டு சுமதி,
41-வது வார்டு குபேரன் என்ற சங்கர்,
42-வது வார்டு ஜெயப்பிரகாஷ்,
43-வது வார்டு ரம்யாஸ்ரீ,
44-வது வார்டு பத்மா,
45-வது வார்டில் கலாவதி