மேலும் அறிய

TVK Vijay: 2006 vs 2026! விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்? ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா தவெக?

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் 27 லட்சம் வாக்குகள் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியது போல விஜய்யும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்ற கேள்வியும், எதி்ரபார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.  இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் தவெக தலைவர் விஜய். 

விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்?

எம்ஜிஆரை முன்னோடியாக கொண்டு திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். அவர்களில் ஜொலித்தவர் விஜயகாந்த் மட்டுமே. விஜய்யும் விஜயகாந்த் போல மிகப்பெரிய வாக்கு வங்கியை வரும் தேர்தலில் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு முதன்முறையாக அரசியல் களத்தை எதிர்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்றார். அவரைப் போலவே தற்போது தவெக தலைவர் விஜய்யும் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறார்.

விஜயகாந்தும் திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போதுதான் அரசியலுக்குள் கால்தடம் பதித்தார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜயகாந்த் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்யும் திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்குள் கால்தடம் பதித்துள்ளார். இவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த தேர்தலில் இவருக்கு ஆதரவாக இணையதளங்களில் பரப்புரை செய்தனர்.

எகிறிய வாக்கு சதவீதம்:

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 66 லட்சத்து 3 ஆயிரத்து 352 ஆகும். அந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 5 ஆயிரத்து 492 ஆகும். வாக்கு சதவீதம் 70.82 சதவீதமாக பதிவாகியிருந்தது. அதாவது, 2001ம் ஆண்டு பதிவான வாக்குகளைக் காட்டிலும் இது 11.49 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது, 49 லட்சத்து 69 ஆயிரத்து 426 வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருந்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் இந்த தேர்தலில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 85.10 சதவீதம் ஆகும். எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர்கள் மறுவரையறை, விஜய்யின் வருகை காரணமாக வாக்கு சதவீதம் கடந்த தேர்தலைக் காட்டிலும் 12.37 சதவீதம் அதிகரித்துள்ளது.  
அதாவது, 30 லட்சத்து 38 ஆயிரத்து 509 வாக்குகள் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

எத்தனை சதவீதம்? எத்தனை தொகுதிகள்?

இப்போது, விஜயகாந்தைப் போலவே விஜய்யும் தனது முதல் தேர்தலிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த் தனது முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 வாக்குகள் பெற்றார். அதாவது, 8.38 சதவீதம் வாக்குகள் பெற்றார். 

விஜய்யும் விஜயகாந்த் போல மிகப்பெரிய வாக்குசதவீதத்தைப் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இளைஞர்கள் வாக்குகள் பெரியளவு விஜய்க்கு விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. பெண்கள் வாக்குகளும் மிகப்பெரிய அளவில் விஜய்க்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, முதியவர்களும் விஜய்க்கு ஆதரவாக வாக்குகள் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தை விட விஜய் அதிகளவு வாக்குகள் பெறுவாரா? விஜயகாந்த் 27 லட்சம் வாக்குகள் பெற்றாலும் முதல் தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். விஜயகாந்த் அந்த தேர்தலில் தோற்றாலும் அவரது கட்சியும், அவரது முரசு சின்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. விஜய்யின் தவெக முதல் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? என்ற பலத்த கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அரசியல் எதிர்காலம்:

2006ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திமுக-விற்கும் எதிர்க்கட்சியான அதிமுக-விற்கும் 13 லட்சம் வாக்குகளே வித்தியாசம். அதுபோல, விஜய் பிரிக்கும் வாக்குகள் ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகளே விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றே கூறப்படுகிறது. அதேசமயம், விஜய்யின் தவெக பிரிக்கும் வாக்குகளே ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் என்பதை அரசியல் நிபுணர்கள் தீர்க்கமாக கூறுகின்றனர்.

Annamalai: எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

தலைப்பு செய்திகள்

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget