மேலும் அறிய

Annamalai: எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர் பதவியில் இருந்து இவர் மாற்றப்பட்டது முதலே பெரியளவு பிரதிநிதித்துவம் இல்லாமலே இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி அவரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஆந்திராவில் காலியாகும் 4 ராஜ்யசபா எம்பி:

இந்த சூழலில், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு தித்திக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஜுன் 21ம் தேதியுடன் 3 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள், ஒரு தெலுங்கு தேசம் எம்பி என மொத்தம் 4 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. 

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 4  மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியும் தெலுங்கு தேசம் கட்சி வசமே செல்கிறது. இதையடுத்து, 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை தெலுங்கு தேசம் கட்சியே வைத்துக்கொண்டு, மற்ற 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

அண்ணாமலைக்கு எம்பி பதவி?

பாஜக-விற்கு வழங்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அண்ணாமலைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இதனால், அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிவிக்கும் வகையிலும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கும் வகையிலும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக-விற்கு அந்த எம்பி சீட்டை தெலுங்கு தேசம் வழங்கினாலும், ஆந்திர பாஜக நிர்வாகிகள் அந்த எம்பி சீட்டை அண்ணாமலைக்கு தர ஒப்புக்கொள்வார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய இடங்களிலும் பாஜக-விற்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டாபோட்டி:

தெலுங்கு தேசம் கட்சி சார்பின் சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் நண்பர் சனா சதீஷிற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஒரு பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மல்லுகட்டு நடந்து வருகிறது. அதேபோல, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் எம்பி  பதவியை கைப்பற்ற கடும் போட்டி நடந்து வருகிறது.

விஜய் பேச்சு vs விசிக புகார்!! தேர்தல் களத்தில் வெடித்த புதிய சர்ச்சை - முழு விவரம் இதோ...

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget