மேலும் அறிய

TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?

சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை மிகவும் தீவிரப்படுத்தி வருகின்றனர். வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே பரப்புரை செய்ய இறுதி அனுமதி என்பதால் ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று விஜய் பரப்புரை:

இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியிருப்பதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் தனது பரப்புரையை மிகவும் தீவிரப்படுத்தி வருகிறார். நேற்று திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்ட விஜய் இன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார். தவெக-வின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாக தி.நகரில் மாலை 4 மணிக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.

பின்னர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், எழும்பூர் தொகுதியிலும் விஜய் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தவெக சார்பில் செல்வம் போட்டியிடுகிறார். எழும்பூர் தொகுதியில் விசில் சின்னத்தில் ராஜ்மோகன் போட்டியிடுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

சென்னையில் பெரம்பூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரப்புரையில் ஈடுபட்ட விஜய் சில காரணங்களால் வில்லிவாக்கம் பரப்புரையை ரத்து செய்தார். தற்போது மீண்டும் சென்னையில் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட உள்ளார். மேலும், நாளை மறுநாள் தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக உள்ளது.

விஜய் இன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் பல்வேறு மாற்றங்களை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

திமுக கோட்டையாக மீண்டும் மாறுமா சென்னை?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை திமுக-வின் கோட்டையாக திகழ்வதால் இங்கு விஜய்யின் செல்வாக்கு எடுபடுமா? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. குறிப்பாக, விஜய்யே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால் இந்த முறை சென்னை மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. 

தலைப்பு செய்திகள்

’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget