இ்ன்றைய காலத்தில் தலைமுடி பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
ஆரோக்கியமற்ற உணவுகள், காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
சில இயற்கையான முறையில் கூந்தல் வளர்ச்சி பிரச்சினையை நாம் சரி செய்யலாம்.
கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் பலவிதமான சத்துக்கள் செம்பருத்தியில் உள்ளது.
இதனால், கூந்தல் பளபளப்பாகவும் கருமையாகவும் இயற்கையாக மாறும்.
முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதில் செம்பருத்தி மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது.
செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிடுவது மட்டுமின்றி அந்த பூவை அரைத்து தலை முடியிலும் தேய்க்கலாம்.
செம்பருத்தி எண்ணெய்யும் மிக மிக நன்மை பயக்கும். இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கூந்தல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொடுகு பிரச்சினைக்கும் செம்பருத்தி சிறந்த தீர்வாக உள்ளது.