‛கம்யூனிஸ்ட் சகசீரியம் உண்டாயிட்டு வந்து...’ தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த திருவனந்தபுரம் இளம் மேயர்!
‛‛கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை அல்ல தமிழகத்தில், அந்ததந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அரசியல் நிலைபாடு மாறுபடும்’’
ஹிஜாப் சர்ச்சை விவகாரம்:தனிமனித சுதந்திரங்களை பறிக்ககூடாது என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என குமரி மாவட்டம் குழித்துறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் 21வயது இளம்மேயர் ஆரியா ராஜேந்திரன் பேட்டியளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியின்றி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் 21வயது இளம் மேயரான ஆரியா இராஜேந்திரன், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குழித்துறைசந்திப்பு, வெட்டுவெந்தி, மார்த்தாண்டம் பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆரியா ராஜேந்திரன் கூறுகையில்,
‛‛ஹிஜாப் விவகாரத்தில் மத உரிமைகளையும் தனிமனித சுதந்திரங்களையும் பறிக்ககூடாது என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசியல் எதிரியான காங்கிரஸுடன் தமிழகத்தில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தவர், கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை அல்ல தமிழகத்தில், அந்ததந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அரசியல் நிலைபாடு மாறுபடும். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகிவருகிறது,எனவும் கூறினார்.
இளம் மேயரான ஆரியா, வெற்றி பெற்ற போதே பலரின் கவனத்தை ஈர்த்தவர். ஏழ்மை குடும்பத்திலிருந்து உயர் பதவியான மேயர் பொறுப்பை அலங்கரித்தவர். இன்று தான், கேரள எம்.எல்.ஏ., உடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியார்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தனித்து நிற்கும் சூழல் உருவாகி வருவதாக கூறியிருப்பது, கவனிக்க வேண்டிய முக்கிய அரசியல் நிகழ்வாக இருக்கிறது. இது தொடர்பாக இதுவரை அரசியல் கட்சிகள் எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், வேறு மாநிலத்திலிருந்து வந்த ஆரியா, மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக-அதிமுக பிரச்சாரத்தை சமாளிக்க, கேரளாவில் இருந்து உள்ளாட்சி பிரதிநிதிகளை மார்க்சிஸ்ட் கட்சி இறக்குமதி செய்து வருவதால், அதை எவ்வாறு சமாளிப்பது என்கிற குழப்பத்தில் அதிமுக-திமுக உள்ளிட்ட கட்சிகள் திணறி வருகின்றனர். அதுமட்டுமின்றி, குழித்துறை பகுதி கேரள எல்லையில் இருப்பதால், கேரள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பிரச்சாரம் பெரிய அளவில் அங்கு எடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்