மேலும் அறிய

Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பாமகவை நேரடியாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் துரோகிகளை வைத்து சூழ்ச்சி செய்து நம்முடைய குடும்பத்தை பிரித்து விட்டார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக ஒரு நெருப்பு. அக்கட்சியை யாரும் நேரடியாக தொட முடியாது என பென்னாகரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், “பாமக ஒரு நெருப்பு. அக்கட்சியை யாரும் நேரடியாக தொட முடியாது. இந்த பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெற்றதாக வேண்டும் அதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அதாவது திமுக கூட்டணியில் போட்டியிடும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் என்னை பொருத்தவரையில் ஒரு துரோகி. பாமகவில் அடையாளம் கண்டு இன்று பாமகவிற்கு எதிராக போட்டியிடுகின்றார். எல்லோரும் சேர்ந்து அவரை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்.

உங்களுடன் இருக்கும் துரோகிகளில் முதன்மை துரோகி ஜி.கே. மணி. அவர் எப்படிப்பட்டவர் என்றால் என்னையும் என்னுடைய தந்தையையும் பிரித்து விட்டார். ஆனால் அவரும் அவரது மகன் தமிழ் குமரனும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பாமகவை நேரடியாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் துரோகிகளை வைத்து சூழ்ச்சி செய்து நம்முடைய குடும்பத்தை பிரித்து விட்டார். 

இருந்தாலும் முன்பை விட நாங்கள் இன்னும் கூடுதல் பலமாக இருக்கிறோம். இந்த பென்னாகரம் தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இங்கு மொத்தமாக அந்த கட்சிக்கு 500 ஓட்டு இருந்திருக்குமா? தமிழ் குமரன் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்வாராம். அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்படுமாம். ஜி.கே. மணி உங்களுக்கு திமுக பிடிக்கும் என்றால் நீங்கள் அங்கு  சென்று சேர்ந்திருக்கலாமே?. 

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை திமுக செயல்படுத்தாமல் போனதற்கு ஜி.கே. மணி தான் முக்கிய காரணம். அதனைக் கண்டித்து திமுகவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் செய்யலாம் என்று நாங்கள் முயற்சி செய்யும்போது உடனே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போன் செய்து  போலியான வாக்குறுதியை ராமதாஸுக்கு பெற்றுக் கொடுத்தார். 2022ல் 25 ஆண்டு காலமாக பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியிடம் இருந்து அந்த பதவியை நான் பெற்ற நிலையில் என்னைப் பற்றி ராமதாஸிடம் தவறாக சொல்லி வருகிறார். எனவே யாரும் என் அப்பா ராமதாஸை திட்டவோ, குறை சொல்லவோ செய்யாதீர்கள். அவருக்கு 89 வயது ஆகிவிட்டதால் குழந்தை போல மாறி விட்டார்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget