மேலும் அறிய

விஜய்க்கு டபுள் ஓகே.. அடுத்தடுத்து தவெகவுக்கு குட் நியூஸ்.. விஜய் போட்டி உறுதி, அப்ப ஆதவ் அர்ஜூனா?

தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இதன்மூலம், விஜய் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரம் போல் சுழன்று வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு முடிந்த நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்றுடன் வேட்புமனுதாக்கல் முடிந்தது. இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து, இன்று வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 

விஜயின் வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவாகியுள்ள தவெக தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா? என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். அவரின் வேட்புமனுவில் வயது, குற்றவழக்குகள் குறித்து தவறான தகவல் இருந்ததால், மீண்டும் திருத்தப்பட்ட மனுவை விஜயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், போட்டியிடும் இரண்டு தொகுதிகளான சென்னை பெரம்பூரில் அவரின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இதன்பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியிலும் மனு ஏற்கப்பட்டது. 

விஜய் போட்டியிடுவது உறுதி

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதால் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியானது. இதனால், தவெவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. முன்னதாக ஆதவ் அர்ஜூனா தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாக கூறி வேட்புமனுவை ஏற்க சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்காரணமாக, அவரின் வேட்புமனு பரீசீலனை நிறுத்தப்பட்டது. பின்னர், அவரின் மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாக கூறி தேர்தல் நடத்து அலுவலர் ஆதவ் அர்ஜூனாவிம் மனுவை ஏற்றார். இதன்மூலம், வில்லிவாக்கம் தொகுதியில் அவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தவெகவில் முக்கிய தலைவர்களான விஜய், ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது தவெகவினருக்கு அடுத்தடுத்து குட்நியூஸ் ஆக வருவதால் அவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget