(Source: ECI/ABP News/ABP Majha)
TN Urban Local Body Election News LIVE: 30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையம்..
TN Urban Local Body Election 2022 News LIVE Updates: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : இன்றுடன் ஓய்கிறது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்
LIVE
Background
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 17.2.2022 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வந்த பின்னர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியில் இருந்து அழைந்து வரப்படம் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க., நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் காணொலி காட்சி மூலமாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு அறிக்கை..
”நாளை (19.2.2022) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அவர்கள்
வார்டு எண்.123, சென்னை ஹைஸ்கூல், திருவள்ளுவர் தெரு, தேனாம்பேட்டையில் தனது வாக்கினை பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி”.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
கோவையில் உள்ள குண்டர்கள், ரவுடிகளை வெளியேற்றுக: ஈபிஎஸ் ஆவேச பேச்சு..
கோவையில் உள்ள குண்டர்கள், ரவுடிகளை வெளியேற்றுக: ஈபிஎஸ் ஆவேச பேச்சு..
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையர்
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன - மாநில தேர்தல் ஆணையர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தற்போது விளக்கமளித்து வருகிறார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தற்போது விளக்கமளித்து வருகிறார்
கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்
கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநில தேர்தல் ஆணையம்