மேலும் அறிய

Tamil Nadu Election 2024: கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு வாக்காளர்களின் பெயர்கள் இல்லை எனப்புகார் ; பாஜகவினர் போராட்டம்

வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் சிலரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் அமர்ந்து போராட்டம் நடத்தினர்

கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாகவும் 800-க்கும் மேற்பட்டோர் ஓட்டுகள் இல்லை எனவும் பல்வேறு வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். அதிகாரி விசாரித்து பதில் அளிப்பதாக கூறினார்.

பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் சிலரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வானதி சீனிவாசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இது குறித்து பேசினார். அப்போது கடந்த முறை வாக்களித்த வாக்காளர்களின் பட்டியல் தற்பொழுது குறுகிய காலத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 225 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ராணுவத் துறையினர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
Embed widget