மேலும் அறிய

TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்

Tamil Nadu By-Election 2026: 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். தேர்தல் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். வரும் 22ஆம் தேதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், விஜய் தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றதால் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) அதில் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானது.

திருச்சி கிழக்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 151-A படி, காலியிடம் ஏற்பட்ட 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதி அல்லது மாவட்டத்தில் MCC அமலில் வரும். அரசின் புதிய அறிவிப்புகள், விளம்பரங்கள், நலத்திட்ட அறிவிப்புகள் போன்றவை தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அமைச்சர்களின் பயணங்கள் மற்றும் அரசு வளங்களின் பயன்பாடு கண்காணிக்கப்படும். தங்களது சொந்த தொகுதியில் தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகள் பணியாற்றக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அதே இடத்தில் பணியாற்றியிருந்தால் மாற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 22ஆம் தேதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

 Also Read: ‘அடுத்த சாவு நீதான்’ - பயத்தில் தந்தை தற்கொலை; மகள் மரண வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் அட்டகாசம் - நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதால் அடுத்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget