எந்த தலைவரும் தொட முடியாத சாதனை படைத்த பிரதமர் மோடி - அப்படி என்ன செய்தார் தெரியுமா?
Published by: ராஜேஷ். எஸ்
இந்திய அரசியலில் நரேந்திர மோடி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி மோடி பிரதமராக தொடர்ச்சியாக 4399 நாட்கள் நிறைவு செய்தார்.
முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமராக மிக நீண்ட காலம் தொடர்ச்சிய பதவி வகித்தவர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.
பிரதமராக 4398 நாட்கள் பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடித்தார்.
குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகள், பிரதமராக 11 ஆண்டுகள் பதவி வகித்த அனுபவத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக கிட்டத்தட்ட 9,000 நாட்கள் இருந்த அசைக்க முடியாத சாதனையை படைத்துள்ளார்
மோடி, பவன் சாம்லிங் (சிக்கிம்), நவீன் பட்நாயக் (ஒடிசா) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
அடுத்த அக்டோபருக்குள் மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளார்.
அதிக காலம் பணியாற்றிய காங்கிரஸ் அல்லாத பிரதமராக மோடி முதலிடத்தில் உள்ளார்
தொடர்ச்சியாக இரண்டு முறை தெளிவான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.