மேலும் அறிய

TN Election 2026 | வெற்றி பெற்ற பின்.... மதுரையில் வீடெடுத்து தங்குவேன் - இயக்குநர் சுந்தர் சி உறுதி !

மதுரையிலேயே வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும், மாதத்தில் 15 நாட்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தமிழகமே எனது வீடு... மதுரையை முதன்மை நகரமாக மாற்றுவதே லட்சியம்: அதிமுக வேட்பாளர் சுந்தர் சி பேட்டி.

வேட்பாளர் சுந்தர் சி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
 
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி....,” இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தபோது மக்களிடம் இருந்த எழுச்சியும், இரட்டை இலை சின்னத்திற்கு அவர்கள் அளிக்கும் ஆதரவும் எனக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. 200 சதவீதம் மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொகுதிக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. சுகாதாரம், தூய்மையான குடிநீர், சாலை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற எளிய மக்களின் தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திலும், அரசுப் பணிகளிலும் ஊழல் மற்றும் லஞ்சம் மலிந்து கிடப்பதாக அவர் சாடினார்.
 
மதுரைக்கும் சுந்தர் சி-க்கும் சம்பந்தமே இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்திருந்தது குறித்துக் கேட்டபோது,
 
கனிமொழி அவர்கள் தூத்துக்குடிக்காரரா? அவரும் சென்னையைச் சேர்ந்தவர் தான். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அவர் அங்கு சென்றார். நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு ஊர் ஒரு தடையல்ல. தனது தந்தை அரசு ஊழியராக இருந்ததால் ஈரோட்டில் பிறந்ததாகவும், கோவையில் வளர்ந்து சென்னையில் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். தனது தாயாரின் பூர்வீகம் திருச்சி என்றும், தந்தையின் பூர்வீகம் பழனி என்றும் தெரிவித்த அவர், தமிழகம் தான் எனது வீடு, இனி மதுரை தான் எனது ஊர் என்று கூறினார். இதற்காக மதுரையிலேயே வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும், மாதத்தில் 15 நாட்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
நாளை முதல் தொகுதி முழுவதும் முழு வீச்சில் பிரசாரம்
 
தமிழர்களின் தலைநகர் சென்னை என்றால், தமிழின் தலைநகர் மதுரை. இழந்த பெருமையை மதுரைக்கு மீண்டும் பெற்றுத் தருவதே எங்களது நோக்கம். மதுரையை லஞ்சம், ஊழலற்ற முதன்மை நகரமாக மாற்ற எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் என்.டி.ஏ  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நாளை முதல் தொகுதி முழுவதும் முழு வீச்சில் பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget