மேலும் அறிய

"வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள், சில கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும் சில கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் அமைந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவுகள் 2024: ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதிய ஆட்சி அமைக்கும் நோக்கில் பிரதமர் பதவியை மோடி ராஜினானா செய்துள்ளார். அதை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்று கொண்டுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு நடந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் சக அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய மோடி, "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி. எண்ணிக்கை விளையாட்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது" என்றார்.

அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் நல்ல பணிகளை செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து செய்வோம். கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றியை முடிவுகள் காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த முறையில் பணியாற்றிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள்" என்றார். நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக, அதிமுகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி சாதனை படைத்துள்ளது.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், 99 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி  கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 29 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 22 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது. 

இதையும் படிக்க: Lok Sabha Election 2024: “நிதிஷ், சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை பேசவில்லை” - இந்தியா கூட்டணி முடிவு பற்றி சரத்பவார் விளக்கம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Embed widget