மேலும் அறிய

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

கடந்த நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி அடிக்காத கொள்ளையே கிடையாது என மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் விமர்சனம் செய்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5 ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. 

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டன. குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும் இதேபோன்று மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும் ஏற்கப்பட்டன. 

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 105 மனுக்களும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்களும் எவ்வித நிராகரிப்பு இன்றி அனைத்தும் வேட்புமனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்தது. சில வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் திரும்ப பெற்ற நிலையில், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மட்டும் அதிமுக 2 வார்களிலும்,திமுக ஒரு வார்டிலும் பேட்டியின்றி தேர்வாகினர். இதனை தொடர்ந்து பல கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் களம் இறங்கி உள்ளனர். 

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான  நிவேதா.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். 

Local Body Election | அதிமுகவினரே திமுகவுக்கு ஓட்டு போட தயாராக உள்ளார்கள் - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டிய வியூகம் குறித்து விளக்கம் அளித்து கூட்டத்தில்  பேசிய அமைச்சர், கடந்த நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி அடிக்காத கொள்ளையே கிடையாது, நான்கரை லட்சம் கோடி கடன், துறை ரீதியாக ரூபாய் 3.36 லட்சம் கோடி கடன் என தமிழ்நாட்டை மொத்தம் ஒன்பது லட்சம் கோடி கடனில் மூழ்கடித்து கஜானாவை காலி செய்துவிட்டு  சென்றுள்ளனர். இருந்தும் தமிழக முதல்வர் இந்தியாவே போற்றும் அளவிற்கு இந்த மாநிலத்தை சிறப்பாக கொண்டு வந்துள்ளார். மக்கள் திமுகவிற்கு கொடுத்துள்ள ஆதரவால் தற்போது அதிமுகவினர் ஒதுங்கி நிற்கிறார்கள். அதிமுகவினரே திமுகவினருக்கு ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளார்கள் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget