மேலும் அறிய

Urban Local Body Election: பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் பாஜக வேட்பாளர்.. சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை..

மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தி சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5-ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

Urban Local Body Election: பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் பாஜக வேட்பாளர்.. சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை..

இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Urban Local Body Election: பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் பாஜக வேட்பாளர்.. சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை..

இந்த சூழலில் மயிலாடுதுறை நகராட்சி 6-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பாரதிகண்ணன் என்பவர்  போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் 6-வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.  மேலும் அவர் வாக்கு சேகரிக்க செல்லும்போது பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பள்ளி பயிலும் மாணவர்களின் கைகளில் பாஜக கொடியினை கொடுத்து அவருடன் அழைத்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Urban Local Body Election: பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் பாஜக வேட்பாளர்.. சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை..

இதனை கண்ட பலரும் இது குழந்தைகளுக்கு எதிரான செயல் என்றும் இது போன்று தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி பருவ மாணவர்களை பயன்படுத்துவது சட்டபடி குற்றம் எனவும், இதனை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்  என்ற தேர்தல் விதிமுறையும் காற்றில் பறக்கவிட பட்டுள்ளதாகவும், எந்த ஒரு கட்சியினரும் அவ்வாறு இரண்டு பேர் மட்டும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதில்லை என்றும், கூட்டமாக சென்று பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதனையும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Local Body Election | திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவியை பெற திமுக, காங் இடையே கடும்போட்டி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget