மேலும் அறிய

மதுரையில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - சு.வெங்கடேசன்

மதுரையில் இரண்டு லட்சம் வித்தியாசத்தில், கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன்

TN Lok Sabha Election Results 2024: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு அளித்தனர்.
 
 மதுரை அதிமுக வேட்பாளார் சரவணன்
 
மதுரை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்த அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலையில் முதலில் தொடங்கிய தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் போது, பல தபால் ஓட்டுகள் கவர் ஒட்டப்படாத நிலையில் பிரிந்து இருந்ததது. வாக்களித்தவரின் கையெழுத்துகள் அடித்தல் திருத்தலுடன் இருந்தது. பல வரிசை எண்கள் திருத்தப்பட்டு இருந்தன. இதனைச் சுட்டிக் காட்டிய போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வது போல், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  சங்கீதாவின் பேச்சு இருக்கிறது. தொடர்ந்து பிற வாக்குகளின் எண்ணிக்கையிலும் தவறுகள் நடைபெறவும். முடிவுகள் மாற்றி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதனால், மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார். அதேபோல் மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் மாவட்ட தேர்தல் அதிகாரி சங்கீதா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
 
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
 
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுகள் முடிவுகளும் இந்திய கூட்டணி வேட்பாளரான எனக்கு சுமார் 1,04,664 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வாக்களித்திருக்கிறார்கள். இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருக்கிறோம். இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மோடியின் மீடியாக்கள் சொன்ன உண்மையை இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றுதான் தற்போது வந்து கொண்டிருக்கிற செய்தி என்றார்.
 
மதுரை நாடாளுமன்றத் தொகுதி 9ஆம் சுற்று முடிவு 

சிபிஎம் சு. வெங்கடேசன் - 2,07,102
அதிமுக டாக்டர் சரவணன் - 1,02,438
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 1,00,918
நாம் தமிழர் சத்யா தேவி - 45,127

சிபிஎம் சு.வெங்கடேசன் 9ஆம்சுற்று முடிவில் 1,04,664  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Embed widget