மேலும் அறிய

பிரேமலதா அண்ணி அதிமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் - சுந்தர் சி பேட்டி !

ராஜராஜ சோழனை விட அதிகமான குடமுழுக்குகளை சேகர்பாபு செய்தார் என பேசிய கமலஹாசன் குறித்து கேட்டதற்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்த சுந்தர் சி.

என்னை சினிமாக்காரர், சினிமா சங்கீ என கூறும் அமைச்சர் பி.டி.ஆர்க்கு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சினிமாக்காரர் தான் தேவைப்படுகிறார்.  நடிகர் சுந்தர்.சி பேட்டி.

சுந்தர் சி பேட்டி
 
மதுரை மத்திய தொகுதி என்.டி.ஏ கூட்டணியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி மதுரை தீக்கதிர் திருவள்ளுவர் நகர் தெருவில் உள்ள மக்களிடம் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...," மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். தினந்தோறும் பல்வேறு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று திருவள்ளுவர் தெரு பகுதியில் திமுகவை சேர்ந்த 100 நபர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
 
அண்ணா திமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்
 
மதுரை மத்திய தொகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு பாதாள சாக்கடை, குப்பை, தெரு விளக்குகள் எரியாதது பிரதான பிரச்னையாக உள்ளது. பத்து வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் இந்த தொகுதி பக்கமே வரவில்லை எனவும் மக்களின் அடிப்படை பிரச்னையை கூட தீர்த்து தர வில்லை என மத்திய தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பிரேமலதா அண்ணி திமுக கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அண்ணா திமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கூற வேண்டிய விஷயத்தை அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். முதல்வர் முன்பாகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை கலாச்சாரம் பெருகி உள்ளது, என வெளிப்படையாக கூறிய தமிழ்நாட்டின் தைரியமிக்க வீரப் பெண்மணி பிரேமலதா விஜயகாந்த்.
 
பிடிஆர் க்கு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சினிமாக்காரர் தான் தேவைப்படுகிறார்
 
கேள்விகளை கேட்டால் அவர் என்னை வெளியூர் காரர் என விமர்சனம் செய்கிறார். என்னுடைய  எதிர் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரே உத்தமப்பாளையக்காரர் அவர் என்னை பார்த்து வெளியூர் காரர் என கூறுகிறார். என்னை சினிமாக்காரன் என்று கூறிக்கொண்டு மற்றொரு சினிமாக்காரனான எனது நண்பர் பிரகாஷ்ராஜை அழைத்து வந்து இங்கு பிரச்சாரம் செய்ய வைக்கிறார். பிடிஆர் க்கு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சினிமாக்காரர் தான் தேவைப்படுகிறார்.  சொந்தக் கட்சியிலே செல்வாக்கு இல்லாத நபர் பி.டி.ஆர் மதுரை வந்த உதயநிதி மற்ற வேட்பாளர்களுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார் ஆனால் இவருக்கோ பிரச்சாரம் செய்யவில்லை இதுதான் அவருடைய நிலைமை அந்த கட்சியில். பிடிஆரின் இமேஜ் கிழிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. மக்களுக்கு சேவை செய்ய இமேஜ் தேவை இல்லை நல்ல எண்ணம் இருந்தால் போதும். ராஜராஜ சோழனை விட அதிகமான குடமுழுக்குகளை சேகர்பாபு செய்தார் என பேசிய கமலஹாசன் குறித்து கேட்டதற்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்த சுந்தர் சி.
 
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களை சந்தித்து பிரச்னைகள் குறித்து கேட்டார். தொடர்ந்து அவர்களிடம் கோரிக்கைகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget