மேலும் அறிய

Lok Sabha Phase 4 Polling: அடுத்த மூவ் நான்காம் கட்ட வாக்குப்பதிவு: ஆந்திராவில் ரோடு ஷோவுக்கு தயாராகும் மோடி!

Lok Sabha Phase 4 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு, மே 13ம் தேதி நடைபெற உள்ளது.

Lok Sabha Phase 4 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்காம் கட்டமாக, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவு எப்போது?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி நேற்று மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவில்,  மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 13ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்: AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா

எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு?

ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

களத்தில் 1700+ வேட்பாளர்கள்:

96 தொகுதிகளில் போட்டியிட நான்காயிரத்து 264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக, தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 1488 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கு 1103 வேட்புமனுக்களும் கிடைக்கப் பெற்றன. பரிசீலனைக்குப் பிறகு அவற்றில் 1970 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதியில் சில வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதால், தற்போது ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 வது கட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்:

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் களம் காண்கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா  மேற்குவங்கத்தில் களம் காண்கிறார்.

தேர்தல் முடிவுகள்:

முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மே 13, மே 20, மே 25 மற்றும் ஜுன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக, வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

பிரதமர் மோடி ரோட் ஷோ..!

வாக்குப்பதிவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவும், என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடாவில் புதன்கிழமை ரோட்ஷோ நடத்தவும் உள்ளார். ஆந்திராவில்  ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மே 13ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Embed widget