Lok Sabha Elections 2024: வெற்றி பெற்றால் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி - பாரிவேந்தர் உறுதி!
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டிற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரான பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களை துறையூரில் சந்தித்த பாரிவேந்தர் பேசியதாவது, “ நான் கட்டாயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை பெரம்பலூர் மக்கள் கொடுத்துள்ளனர். கூட்டணிக் கட்சியினரும் பிரச்சாரத்தின்போது மிகவும் உறுதுணையாக இருந்தனர். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் நான் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், தொகுதியில் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுப்பேன்” என பேசினார்.