மேலும் அறிய

TN Lok Sabha Election Results 2024: மயிலாடுதுறையில் 12வது முறையாக வெற்றியை ருசித்த காங்கிரஸ் - ஈஸியாக ஜெயித்த சுதா

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா எளிதாக வெற்றியை தன்வசம் படுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட வாக்குக் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜுன் 4 -ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

TN Lok Sabha Election Results 2024: மயிலாடுதுறையில் 12வது முறையாக வெற்றியை ருசித்த காங்கிரஸ் - ஈஸியாக ஜெயித்த சுதா

தொகுதி விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும்  172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில்  1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.

TN Lok Sabha Election Results 2024: மயிலாடுதுறையில் 12வது முறையாக வெற்றியை ருசித்த காங்கிரஸ் - ஈஸியாக ஜெயித்த சுதா

பதிவான வாக்குகள்:

160.சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 86,100 ஆண் வாக்காளர்களும், 91,815 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 1,77,919 வாக்குகள் பதிவாகின.

161. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 80,308 ஆண் வாக்காளர்களும், 82,542 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,62,852 வாக்குகள் பதிவாகின. 

162. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 93,162 ஆண் வாக்காளர்களும், 1,00,872 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1 பேரும் என மொத்தம் 1,94,035 வாக்குகள் பதிவாகின. 

170. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 89,873 ஆண் வாக்காளர்களும், 94,858 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 1,84,734 வாக்குகள் பதிவாகின. 

171. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 89,058 ஆண் வாக்காளர்களும், 92,808 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,81,868 வாக்குகள் பதிவாகின. 

172. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 87,028 ஆண் வாக்காளர்களும், 94,798 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேரும் என மொத்தம் 1,81,835 வாக்குகள் பதிவாகின. 
  
TN Lok Sabha Election Results 2024: மயிலாடுதுறையில் 12வது முறையாக வெற்றியை ருசித்த காங்கிரஸ் - ஈஸியாக ஜெயித்த சுதா

வாக்கு எண்ணும் மேசைகள் விவபரம் மற்றும் சுற்றுகள்

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் வீதம் 84 மேசைகளும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 7 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுக்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுக்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்கள், தபால் வாக்குகளுக்கு 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வெற்றி விபரம்

இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 5,16,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக தொடர்ந்து அனைத்து சுற்று முடிவிலும் இவரே முன்னிலை பெற்றுவந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபுவைவிட 2,70,451 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி தன்வசம் படுத்தினர். 

TN Lok Sabha Election Results 2024: மயிலாடுதுறையில் 12வது முறையாக வெற்றியை ருசித்த காங்கிரஸ் - ஈஸியாக ஜெயித்த சுதா

போட்டி வேட்பாளர்கள் விபரம்

அதிமுக வேட்பாளர் பாபு 2,46, 083 வாக்குகளும், பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,65,770 வாக்குகளும்,  நா.த.க காளியம்மாள் 1,65,770 வாக்குகளும் பெற்றனர். இழுபறி நீடிக்கும் என எதிர்பாத்த இந்த தொகுதியில் மிக எளிதாக தனது வெற்றியை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 12வது காங்கிரஸ் எம்பியாக தேர்வாகி மீண்டும் மயிலாடுதுறை காங்கிரஸ் கோட்டை என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget