(Source: ECI/ABP News/ABP Majha)
Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே
Lok Sabha Election Results 2024 LIVE Updates: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கயின் சமீபத்திய மற்றும் உடனுக்குடனான தகவல்களை இந்த நேரலையின் பக்கத்தில் காணலாம்.
LIVE
Background
Lok Sabha Elections Result 2024:
இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் ஜூன் 4 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக பார்க்கப்படும் இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்படுகிறது
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
வாக்கு சதவிகிதம்:
முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவிகித வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவிகித வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவிகித வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவிகித வாக்குகளும் 7-வது கட்ட தேர்தலில் 62.36 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை:
வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆனால் இம்முறை, எண்ணப்பட்ட தபால் வாக்குககளின் முடிவுகள் முதலில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், கடைசி கட்ட மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்குகள் முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான போட்டி:
மக்களவைக்காக நடைபெற்று வரும் தேர்தலில் தேசிய அளவில் முக்கியமாக 2 கூட்டணிகள் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணி இடையேயான மோதல் தீவிரமாக இருந்தது. தங்களது கூட்டணி வந்தால் என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும், நாட்டின் வளர்ச்சிக்கான கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
தேர்தலின்போது ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பல இடங்களில் தேர்தலானது சுமூகமாகவே நடைபெற்றது.
தொடர் நேரலை:
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தான தேசிய அளவிலான உடனடி தகவலை ஏபிபி நாடு வலைதள பக்கத்தில் தொடர் நேரலையாக பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தலின் முடிவுகளை வைத்து யார் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும், தொகுதிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்தும், நட்சத்திர வேட்பாளர்கள் நிலைமை குறித்துமான தேசிய அளவிலான தகவலை இந்த பக்கத்தில் தொடர் நேரலையாக காணலாம்.
வாக்கு எண்ணிக்கை குறித்தான சமீபத்திய மற்றும் உடனடி தகவல்களை ஏப்பி நாடு ABP Nadu வலைதளத்தில் நேரடியாக வழங்க இருக்கிறோம். அதற்கு, தொடர்ந்து இணைந்திருங்கள், இந்த நேரலை பக்கத்தில்.
Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே
Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு. மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் மனதார ஏற்கிறோம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்த பிரச்னைகளை நாங்கள் மனதார மக்களிடம் கொண்டு சென்றோம் - மல்லிகார்ஜுன கார்கே
Election Results 2024 LIVE: ராகுல், ப்ரியங்கா காந்தி காங்கிரஸ் அலுவலகம் வருகை
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி வருகை தந்துள்ளனர்
Election Results 2024 LIVE: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றார்.
”தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்” தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
”தேர்தல் முடிவுகள் வெளியிடுவதிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிடுவதிலும் தாமதம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மிகப்பெரிய திருப்பம்! உத்தர பிரதேசத்தில் 43 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
உத்தர பிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 43 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.