![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?
திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் ஏஜெண்டுகள் கடைபிடிக்கவேண்டியது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
![Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன? Lok Sabha Election 2024 What should the candidates observe during the counting of votes in the parliamentary elections -TNN Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/fc1c71c5ae27804de19b0f276f5776351715944989424739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர்வரும் 04.06.2024 அன்று இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆசோனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை
வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைபோது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்:
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாக கட்டிடங்களிலும், ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேனிலைப் பள்ளி
வளாக கட்டிடங்கள், சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்குறிப்பிட்ட இடங்களில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேசைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும், அஞ்சல் வாக்கு சீட்டுகள் 1.Service Voters (ETPBS-Electronically Transmitted Postal Ballot Papers) 2. Other Postal Ballot Papers – தேர்தல் நடத்தும் அலுவலரின் கண்காணிப்பில் தனி அறையில் எண்ணப்படும், வாக்கு எண்ணிக்கை நாள் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்போன் எடுத்துவர அனுமதி இல்லை
மையத்தில் காலை 8.00 மணி வரை அஞ்சல் மூலம் வரப்பெறும் ETPBS அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் காலதாமதமாக வரப்பெறும் ETPBS அஞ்சல் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் காலம் கடந்து வரப்பெற்றவை என குறிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். நியமனம் செய்யப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களின் தற்போதைய வண்ணப் புகைப்படம்-2 நகல்களுடன் படிவம்- 18ஐ சம்மந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரின் அலுவலகத்தில் 31.05.2024 -இக்குள் வழங்கி உரிய Counting Agent Identity Card பெற்றக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 04.06.2024 அன்று காலை 7.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டும்.வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. மேலும் வேட்பாளர்களும் தங்களது கட்சி முகவர்களுக்கென வெளியிலிருந்து உணவுப்பொருட்கள் எவற்றினையும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வர அனுமதியில்லை.
வெற்றி பெற்ற வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே சான்றிதழ் பெறவேண்டும்
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மேற்படி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மேசையை விட்டு அடுத்த மேசையை பார்வையிட செல்லக்கூடாது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போது மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர் பெறும்போது வேட்பாளருடன் நான்கு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் இப்பணியில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கை முடித்து தருவதற்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முவர்கள் தகுந்த ஒத்துழைப்பினை தர வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)