மேலும் அறிய

Lok Sabha Election 2024: விழுப்புரம் தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? - முழு விவரம் உள்ளே!

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,69,070 பெண் வாக்காளர்கள் 5,80,256 மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் வாக்காளர் அதிகாலையில் இருந்தே வாக்களித்து வந்தனர். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1068 வாக்குச்சாவடி மையங்களில் 1966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. 

விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர்  உள்ளனர். இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பிற்காக 2200 காவல்துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Lok Sabha Election 2024: விழுப்புரம் தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? - முழு விவரம் உள்ளே!

76.47 சதவிகித வாக்குகள் பதிவு 

இந்த நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,69,070, பெண் வாக்காளர்கள் 5,80,256, மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட வாக்குகளை ஒப்பிடுகையில், 2019 விழுப்புரம் தொகுதி  அங்கு வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 14,43,436. பதிவான வாக்குகள் 11,28,998 பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 78.21%. 2024 ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின்  எண்ணிக்கை 15,03,115. பதிவான வாக்குகள் 1104639. பதிவான வாக்குகள் சதவீதம் 73.49%. 2019 இன் படி 3,19,438 பேர் வாக்களிக்கவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில். இந்தக் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கடந்த ஏழு ஆண்டுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மேற்கொண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் தடை விதித்தனர். இதன் காரணமாக இக்கோயிலுக்கு ஏழு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு 

இதனால் இந்த ஆண்டு வழக்கம் போல் கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன் கருப்புக் கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமப்புற மக்கள் கூறுகின்றனர்.

வெறிச்சோடிய வாக்குச்சாவடி

இந்நிலையில், நேற்று காலை நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். ஆனால் இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்தல் முகவர்கள் கூட உள்ளே செல்லவில்லை. இதுபோல் அப்பகுதி பொதுமக்கள் ஒருவர் கூட வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி பயணங்களில் அரசு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திண்டிவனம் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களை வாக்களிக்க சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அப்பகுதியில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Embed widget