மேலும் அறிய

Villupuram Candidate: விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிடும் விசிக ரவிக்குமார்; அவர் செய்தது என்ன?

Villupuram VCK Candidate: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

Villupuram Lok Sabha Constituency VCK Candidate: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் து.ரவிக்குமார்

1960 ஆம் ஆண்டு பிறந்த ரவிக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம், பாரதமாதா நகரில் வசித்து வருகிறார். இவர் எம்.ஏ., பி.எல், பட்டங்களையும்,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 'மன்னன் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு' என்ற தலைப்பில்  ஆய்வு செய்து  2018 ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றவர். 

ரவிக்குமார் பணிகள் 

2006 - 2011 இல் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து  தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். அந்த காலக்கட்டத்தில், நரிக்குறவர் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம், வீட்டுப் பணியாளர் நலவாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், ஓமியோபதி மருத்துவர்கள் நலவாரியம், திருநங்கைகள் நலவாரியம் என ஆறு நலவாரியங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டிலுள்ள குடிசைவீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர வேண்டும் என்ற இவரது கோரிக்கையை ஏற்று அன்றைய முதல்வர் கலைஞர் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்புச் செய்து  இருபத்தொரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக்  கட்டுவதற்கான மாபெரும் திட்டத்தை  அறிவித்தார். 2011க்குள் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. விழுப்புரம் மாவட்டம்தான் அதில் அதிகமாகப் பயனடைந்தது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அந்தத் திட்டம் இப்போது தொடரப்போவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

அரசியல் விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு என  ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சுமார் நாற்பது நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். மணற்கேணி ஆய்விதழ், தமிழ் போதி, தலித் - என 3 பத்திரிகைகளை கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து நடத்திவருகிறார். 

பிரபல ஆங்கில இதழ்களிலும், பிரபல தமிழ் செய்தி இணைய தளங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார் . 

1. 2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'அறிஞர் அண்ணா' விருதையும், 

2. 2019 ஆம் ஆண்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 'திறனாய்வுச் செம்மல்' விருதையும் பெற்றவர். 

3. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும்; 

4. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண் பேராயக் குழு உறுப்பினராகவும் ;

5. அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும்  இருந்தவர். 

6. தமிழக அரசின் சார்பில் புதிரை வண்ணார் நல வாரியம், சமூக சீர்திருத்த வாரியம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். 

6. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக  இருக்கும் ரவிக்குமார், 2019 இல் விழுப்புரம் மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 1.28 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். 

7. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 61 விவாதங்களில் பங்கேற்று தொகுதிப் பிரச்சனைகள், மாநில உரிமைகள், இந்திய அளவிலான பிரச்சனைகளை நோக்கி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

நாடாளுமன்றத்தில் 5  தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.  தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 48 பக்கங்கள் கொண்டது. நாடாளுமன்ற வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான தனிநபர் மசோதா இதுதான் .

நாடாளுமன்ற பணிகள் 

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் உட்பட பொதுப் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில்  1090 கேள்விகளை எழுப்பி 221 பதில்களைப் பெற்றிருக்கிறார்.

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் தொல். திருமாவளவன் அவர்களோடு இணைந்து முதன்முதலில் எழுப்பியவர். அதனால் இப்போது ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்தவப் படிப்பில் சேருகின்றனர். 

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப்பை பாஜக அரசு நிறுத்தியது. அதைத் தொடர வேண்டும் எனத் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களோடு சேர்ந்து நாடாளுமன்ற அவையில் வாதாடியதாலும், விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும் அந்த ஸ்காலர்ஷிப் திட்டம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளாது. அதனால் இந்தியா முழுவதும் சுமார் 2.5 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 

லைசென்ஸ் வாங்கித்தான் மீன் பிடிக்கவேண்டும் என்று பாஜக அரசு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தபோது அதைத் தலைவரோடு சேர்ந்து எதிர்த்து வாதாடி தடுத்து நிறுத்தியவர். அதனால் இந்தியா முழுவதுமுள்ள லட்சக் கணக்கான மீனவ மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

மருத்துவம் 

கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைக் கட்டுப்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான கருவிகளை தனது தொகுதியிலுள்ள 130 துணை சுகாதார நிலையங்களுக்கு வாங்கித் தந்தவர். இவரது தொடர் வலியுறுத்தலால் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையம் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிபோடும் திட்டத்தை தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தச் செய்தவர். 

இப்போது மீண்டும் அதே விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக  வேட்பாளராக  தலைவர் தொல். திருமாவளவன் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget