DMK Alliance Seat Sharing: திமுக கூட்டணி தொகுதி பங்கீடு ஓவர் - எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டி? லிஸ்ட் இதோ..!
Lok Sabha Election 2024: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியாகியுள்ளது.

Lok Sabha Election 2024: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், அந்த கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
திமுக தொகுதிப் பங்கீடு ஓவர்:
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளையும் உறுதி செய்துள்ளது.
21 தொகுதிகளில் திமுக போட்டி:
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக, திமுக தமிழ்நாட்டில் 21 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளை குறிப்பிட்ட சில தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி களமிறக்கியது. ஆனால், இந்தமுறை எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. இதன் காரணமாக நடப்பு தேர்தலில் திமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலும், மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அவர்களது தனித்தனி சின்னங்களிலும் போட்டியிட உள்ளனர்.
எந்த கட்சிக்கு எந்த தொகுதிகள்:
| வரிசை எண் | தொகுதி | கட்சி |
| 1 | வடசென்னை | திமுக |
| 2 | தென்சென்னை | திமுக |
| 3 | மத்திய சென்னை | திமுக |
| 4 | ஸ்ரீபெரும்புதூர் | திமுக |
| 5 | காஞ்சிபுரம் (தனி) | திமுக |
| 6 | அரக்கோணம் | திமுக |
| 7 | வேலூர் | திமுக |
| 8 | தர்மபுரி | திமுக |
| 9 | திருவண்ணாமலை | திமுக |
| 10 | ஆரணி | திமுக |
| 11 | கள்ளக்குறிச்சி | திமுக |
| 12 | சேலம் | திமுக |
| 13 | ஈரோடு | திமுக |
| 14 | நீலகிரி (தனி) | திமுக |
| 15 | கோயம்புத்தூர் | திமுக |
| 16 | பொள்ளாச்சி | திமுக |
| 17 | தேனி | திமுக |
| 18 | பெரம்பலூர் | திமுக |
| 19 | தஞ்சாவூர் | திமுக |
| 20 | தூத்துக்குடி | திமுக |
| 21 | தென்காசி (தனி) | திமுக |
| 22 | திருவள்ளூர் (தனி) | காங்கிரஸ் |
| 23 | கடலூர் | காங்கிரஸ் |
| 24 | மயிலாடுதுறை | காங்கிரஸ் |
| 25 | சிவகங்கை | காங்கிரஸ் |
| 26 | திருநெல்வேலி | காங்கிரஸ் |
| 27 | கிருஷ்ணகிரி | காங்கிரஸ் |
| 28 | கரூர் | காங்கிரஸ் |
| 29 | விருதுநகர் | காங்கிரஸ் |
| 30 | கன்னியாகுமரி | காங்கிரஸ் |
| 31 | புதுச்சேரி | காங்கிரஸ் |
| 32 | விழுப்புரம் (தனி) | விசிக |
| 33 | சிதம்பரம் (தனி) | விசிக |
| 34 | மதுரை | மா. கம்யூனிஸ்ட் |
| 35 | திண்டுக்கல் | மா. கம்யூனிஸ்ட் |
| 36 | திருப்பூர் | இ.கம்யூனிஸ்ட் |
| 37 | நாகை (தனி) | இ.கம்யூனிஸ்ட் |
| 38 | திருச்சி | மதிமுக |
| 39 | நாமக்கல் | கொமதேக |
| 40 | ராமநாதபுரம் | ஐயுஎம்எல் |





















