பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
Government bus drivers;தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் புதிய உத்தரவு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

தொடரும் பேருந்து விபத்துக்கள்
நாளுக்கு நாள் போக்குரவத்து சேவைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப சாலை விபத்துகளால் தொடர் உயிரிழப்பும் தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேருந்து ஓட்டும் போது ஓட்டுநர்கள் மொபைல் போனை பயன்படுத்துவது தான். அந்த வகையில் பல இடங்களில் மொபைல் போனில் பேசிக்கொண்டு பேருந்து ஓட்டுவது. ரீல்ஸ் வீடியோ பார்த்து கொண்டு பேருந்து ஓட்டுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அடையவும் செய்துள்ளது.
ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு முக்கிய உத்தரவு
இதனையடுத்து ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டு பேருந்தை இயக்குவது அதனை தடுக்க அனைத்து கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்யும் போது சில ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே இயக்குவதை பொது மக்கள் புகார் மற்றும் பேருந்தின் CCTV Camera மூலம் கண்டறியப்படுகிறது.
செல்போன்களுக்கு தடை
இவ்வாறு ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும் போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர்கள் தங்கள் பணியின் போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும். பின்னர் பணி முடிந்த பிறகு செல்போனை நடத்துனரிடமிருந்து பெற்று செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்கள் வைத்திருப்பதை பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதினை தெரிவித்து கொள்வதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















