Lok Sabha Election Second Phase LIVE : ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதிக்கு வாக்குப்பதிவு நிறைவு.. அதிகபட்ச வாக்குப்பதிவு எங்கு?
Lok sabha election second Phase: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு – காஷ்மீரில் வாக்குப்பதிவு நடக்கிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா 14 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றம் அதிகம் நிறைந்த மாநிலங்களான சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சி.பி.ஐ. சார்பில் ஆனி ராஜா மற்றும் கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.
இதுபோல, பல தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுவதால் இந்த தேர்தல் சூடுபிடித்துள்ளது.
திரிபுராவில் அதிகபட்ச வாக்குப்பதிவு.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திரிபுராவில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 53.34 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
மக்களவை தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.





















