New Voter ID Card: உங்க வாக்காளர் அடையாள அட்டை கிழிஞ்சுபோச்சா..? உடைஞ்சுபோச்சா..? எளிதாக பெற இதை செய்யுங்க!
உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை மிகவும் மோசமாக உடைந்திருந்தாலோ அதை புதிதாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை மிகவும் மோசமாக உடைந்திருந்தாலோ அல்லது கிழிந்திருந்தாலோ என்ன செய்வது, தொலைந்து போயிருந்தால் என்ன செய்வது, சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அப்போது என்ன செய்வது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இருந்தால் அதற்கு இங்கு பதில் தருகிறோம்.
பழைய அடையாள அட்டையை மாற்ற..
பல ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் லேமினேட் செய்து வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கு. ஒரு வேளை நீண்ட நாள்கள் ஆகி அது கிழிந்திருந்தால் அதை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் கடினம். உங்களிடம் கிழிந்த வாக்காளர் அடையாள அட்டை இருந்தால், அதை எளிதாக புதிய அப்டேட்டுடன் பெறலாம். இதன் செயல்முறையும் மிகவும் எளிதானது.
புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற நீங்கள் பழைய அடையாள அட்டையை எடுத்துகொண்டு, பிரௌசிங் சென்டர், இ சேவை மையம் என எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளே ஸ்டோரிலிருந்து வாக்காளர் ஹெல்ப்லைன் ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும். இது தேர்தல் கமிஷன் செயலியா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் பல போல் ஆப்களும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.
என்ன செய்ய வேண்டும்; முழு விவரம் கீழே..
- அந்த ஆப் மூலம் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும். ஆப் ஓபன் ஆனதும், கீழே வாக்காளர் அப்டேட் சென்ற பாக்ஸை பார்ப்பீர்கள்.
- அதை க்ளிக் செய்ததும் வாக்காளர் செய்ய வேண்டிய அப்டேட் மற்றும் திருத்துவதற்கான பாக்ஸ் தோன்றும்.
- அதன் பிறகு நீங்கள் மாநிலத்தின் பெயரையும், வாக்காளர் அடையாள எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
- நீங்கள் இதற்கு செய்த உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் அனைத்து தரவுகளும் உங்கள் முன் பார்க்கலாம். இதற்குப் பிறகு நீங்கள் சில திருத்தங்களைச் செய்ய விரும்பினால், அதையும் இங்கிருந்து செய்யலாம்.
- புதிய அடையாள அட்டையை பெற, மொபைல் எண்ணை உள்ளிட்டு, கேட்கும் விவரங்களை பதிவிட வேண்டும். (இதற்கான செய்தியும் ஏபிபி நாடு பக்கத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.) லிங்க் இதோ..
- திருத்தம் செய்ய வேண்டும் என்றால், மாற்றுவதற்கான காரணமும் உங்களிடம் கேட்கப்படும். ஒரு வேளை நீங்கள் உங்களது பழைய வாக்காளர் அட்டையை தொலைத்திருந்தால், காவல்நிலையத்தில் நீங்கள் புகார் அளித்த FIR இன் நகலை இணைக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் Submit என்ற பட்டனை கிளிக் செய்தால், அதன் பிறகு உங்கள் கார்டுக்கான அப்டேட் முழுமையாக தேர்தல் ஆணைய பக்கத்திற்கு சென்று விடும்.
உங்கள் குடும்பத்தில் யாரிடமாவது பழைய வாக்காளர் அட்டை கிழிந்திருந்தால், அவரிடம் இந்த முறையைச் சொல்லுங்கள். நீங்கள் விண்ணப்பித்த சில நாட்களில், புதிய பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.