மேலும் அறிய

களத்தில் எதிரி அதிமுக மட்டுமே, பாஜக போன்ற சில்லரை கட்சிகளுக்கு பதிலளிக்க நேரமில்லை - அமைச்சர் டிஆர்பி ராஜா

பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேட்கவும். பாஜக போன்ற சில்லறை கட்சிகள் குறித்து கேட்க வேண்டாம்.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, புறநகர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் திமுக சின்னத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்குகள் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, “திமுக கோவையில் அட்டகாசமான வெற்றியை பெறும். திமுகவுக்கு எதிராக போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் பெறும். பொதுமக்கள் திமுகவின் பக்கம் தான் உள்ளனர்.

மூன்று டிகிரி வெப்பம் அதிகமாகியுள்ளது என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, இன்னும் அடுப்பு பற்ற வைக்கவில்லை எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேட்கவும். பாஜக போன்ற சில்லறை கட்சிகள் குறித்து கேட்க வேண்டாம். அவர்களை பற்றி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிமுகவை வெல்லவே திட்டம் அமைத்து கோவையில் வெற்றி பெறுவோம் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும்.

களத்தில் திமுக, அதிமுக மட்டுமே

உதயநிதி செங்கலை வைத்து அரசியல் பண்ணுகிறார் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும் என்று பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, ”திமுகவை திசை திருப்புவதற்காகவே இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. களத்தில் திமுக, அதிமுக மட்டுமே உள்ளது. பொதுமக்களை சந்தித்து சென்று கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால், அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டி விட்டு களத்தில் உண்மையான எதிரியிடம் போட்டியிட்டு கோவையில் மகத்தான வெற்றி பெறுவோம்” என்றார்.

பின்னர் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசும் போது, ”கோவையில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம். கோவையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Voter list: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பிப்ரவரி 17-க்கு பதில், புதிய தேதி அறிவிப்பு? எப்போது வரும்? - தேர்தல் ஆணையம் தகவல்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பிப்ரவரி 17-க்கு பதில், புதிய தேதி அறிவிப்பு? எப்போது வரும்? - தேர்தல் ஆணையம் தகவல்
திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
TN Election: 137 மட்டுமே..! 1000 டூ 5000 வாக்குகள் - கட்சிகளை கலங்கடித்த 39 தொகுதிகள் - நொந்துபோன வேட்பாளர்கள் - 2021 தேர்தல்
TN Election: 137 மட்டுமே..! 1000 டூ 5000 வாக்குகள் - கட்சிகளை கலங்கடித்த 39 தொகுதிகள் - நொந்துபோன வேட்பாளர்கள் - 2021 தேர்தல்
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
Embed widget