Lok sabha election 2024: மயிலாடுதுறையில் தேர்தலை புறக்கணிக்கும் வாடகை வாகன ஓட்டுநர்கள் - காரணம் என்ன?
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக மயிலாடுதுறை மாவட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் முடிவு.
![Lok sabha election 2024: மயிலாடுதுறையில் தேர்தலை புறக்கணிக்கும் வாடகை வாகன ஓட்டுநர்கள் - காரணம் என்ன? Lok sabha election 2024 Mayiladuthurai rental car drivers have announced that they will boycott the parliamentary elections -TNN Lok sabha election 2024: மயிலாடுதுறையில் தேர்தலை புறக்கணிக்கும் வாடகை வாகன ஓட்டுநர்கள் - காரணம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/330f58fd1a291d6de0e490e7ce607e481710910131756733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கண்காணிப்பு குழுக்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்களது சொந்த வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி, வாடகை வாகன ஓட்டுநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, அது ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக மார்ச் 27 -ம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ம் தேதி நடக்கிறது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்படுகிறது.
VAIKO: வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி துவங்கிய வைகோ - வாரிசு அரசியல் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்
வாடகை வாகன ஓட்டுநர்கள் மனு
இதனால், நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர், தேர்தல் அலுவலர்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக அரசு சார்பில் தனியாரிடம் ஒப்பந்த முறையில் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பது வழக்கம். ஆனால் தற்போது, இந்த வாகனங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் மொத்தமாக கான்ட்ராக்ட் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சில பறக்கும் படைகக்கு அமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் தற்போது சில அதிகாரிகளின் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு
இதனால் டீசல் செலவீனம் மற்றும் வாடகை ஆகியவற்றை முறைகேடாக பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்சி மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் இன்று நூற்றுக்கு மேற்பட்ட வாடகை ஊர்தி ஓட்டுநர்கள் பேரணியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அரசுத்துறை சார்ந்த பயன்பாடுகளுக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை தேர்தல் பணியில் ஈடுபடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை ஓட்டுநர்கள் அனைவரும் புறக்கணித்து, வாக்குப்பதிவு தொடங்கி முடிவு பெறும் நேரம் வரை ஒரு பொதுவான இடத்தில் கூடி அமைதியான முறையில் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர் மனு வழங்கினர்.
Mansoor Ali Khan: “கூட்டணிக்கு யாரும் கூப்பிடல.. என்னைப் பார்த்தாலே பயம்” - மன்சூர் அலிகான் காட்டம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)