மேலும் அறிய

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன் களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற தாங்கள் செயல்படுவோம் என்றும் உறுதி

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு அதிமுகவுக்கு ஆதரவு. அதன் பொதுச்செயலாளர் சந்தனபிரியா பசுபதிபாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உறுதி அளித்தார்.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. யார் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற பேச்சு பரவலாக தமிழகத்தில் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் யார் சேருவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதுபோல பாஜக கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் மறைமுகமாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

இப்படியான சூழலில், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக விற்கு தனது ஆதரத்தை தெரிவித்ததோடு, அதிமுகவின் கூட்டணி கட்சி வெற்றிகளுக்கு 40 தொகுதிகளிலும் எங்களது பங்களிப்பு இருக்கும் என உறுதியளித்துள்ளாராம்.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

இந்த சந்திப்பு மற்றும் ஆதரவு குறித்து அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது, தேவேந்திர குல சமூக வாக்குகளை பெறுவதற்காக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமியின் பார்வை பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாய துவங்கியது.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

இந்நிலையில் அதிமுகவும் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட நிலையில் தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ள தேவேந்திர குல மக்களின் வாக்குகளை அதிமுக மொத்தமாக அள்ள வியூகம் அமைக்கப்பட்டது. இந்த வியூகத்தை கட்சிதமாக முடிக்க விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களமிறங்கினார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் மகளும் மருதம் மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளருமான சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை இல்லத்தில் சந்தித்து அதிமுகவுக்கு தங்களது ஆதரவு உண்டு, 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற எங்களது பங்களிப்பு இருக்கும் எனவும் உறுதி அளித்தார் எங்களது பங்களிப்பு இருக்கும் என உறுதியளித்துள்ளாராம்.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்தனப்பிரியா பசுபதிபாண்டியன், மறைந்த தனது தந்தை பசுபதிபாண்டியன் இருந்த பொழுது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும், அதேபோன்று தாங்களும் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையிலான அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற தங்கள் செயல்படுவோம் என்றார். இந்த நிகழ்வின் போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பி.பி. நடராஜன் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Lok Sabha Election 2024: பாஜக ஆதரவுடன் தென்காசியை குறிவைக்கும் கிருஷ்ணசாமி - செக் வைக்க அதிமுக ஆதரவுடன்  களமிறங்கிறாரா பசுபதி பாண்டியனின் மகள்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்

Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!

Embed widget