மேலும் அறிய

lok sabha election 2024: திமுகவினரே திமுக வேட்பாளர்களை அழிப்பார்கள் - சிவி சண்முகம் அதிரடி பேச்சு

2016ல் அதிமுக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தேர்தல், பாஜக வோடு இணைந்ததால் சிறுபான்மையினர் வாக்கை இழந்தது போல பாமகவுடன் இணைந்ததால் தோல்வி ஏற்பட்டது.

விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்கள் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாநிலங்களை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு உரையாற்றினார் :

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேச்சு :

சாதாரண வேட்பாளர் :-

சுய தொழில் செய்கிற சாதாரண வேட்பாளர் தான் பாக்கியராஜ் என்றும், பணமில்லாத சாதாரண வேட்பாளராக நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருவாக்கி அழகு பார்க்கிற இயக்கம் அதிமுக என்றும், அத்தனை பேரும் சொல்கிறார்கள் அதிமுக வில் சாதாரண வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாக்கியராஜ் அவர்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், இரட்டை இலைக்கு வாக்களிக்கின்ற வாய்ப்பை எட்ப்பாடியார்க்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளார்  அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

கடந்த முறை பெரிய தவறை செய்து விட்டோம்

கடந்த முறை பெரிய தவறை செய்து விட்டோம், ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தை பொறுத்த வரை என்றைக்கும் திமுக தான் எதிரி, அதிமுக தொடங்கப்பட்டதே திமுக அழிக்க வேண்டும் எனபதற்காக தொடங்கப்பட்ட் இயக்கம் என்றும், மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா எனவும்,   ஸ்டாலினுன் மோடியும் நாடகமாடி வருகிறார். இரண்டு பேரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என விமர்சித்து பேசிய அவர் தற்போது நாட்டிற்கு மிக பெரிய ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது என்றார்.

தொண்டர்கள் எழுச்சியோடு அதிமுக 

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சிபிஐ தான் பிஜேபி கூட்டணி  என்றும், மக்களையும் அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறார்கள் பிஜேபி என்றும் 32 ஆண்டுகள் காலம் ஆட்சி கட்டிலில் இருந்த இயக்கம் அதிமுக  என்று பேசிய சி.வி.சண்முகம் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆர் ஆட்சியை நிலை நிறுத்துவேன் என நாடாளுமன்றத்தில் மிக வெற்றியை கண்டவர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா என்றும்  எப்போதெல்லாம் அதிமுக சோதனையை சந்திக்கிறதோ அதன் பிறகு மிக பெரிய வெற்றியை சந்தித்துள்ளது , தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் எவ்வித எதிர்ப்பார்ப்பு இல்லாத தொண்டர்கள் உள்ள இயக்கம் அதிமுக என்றார். 

ஒற்றை தலைமையில் மீட்டெடுத்து வலிமை

இந்த இயக்கத்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் திமுக விடு சேர்ந்து சதி திட்டம் தீட்டி அதிமுக வை பிளவுப்படுத்தி ஒரு பக்கம் எதிரி, ஒரு பக்கம், பிஜேபி மறுப்பக்கம்,  திரோகிகள் ஒரு புறம் என இருந்தார் எனவும், அதிமுக என்றைக்கும் தொண்டர்களால் துரோகிகள் சதிகளை அம்மா வை போல ஒற்றை தலைமையில் மீட்டெடுத்து வலிமையான அதிமுகவை உருவாக்கியது சாதிக்கமுடிந்தது தொண்டர்களளின் அர்ப்பணிப்பும் தான் காரணம் என்றார்.

சோதனையான காலக்கட்டத்தில் அழைக்காமல் கூட உழைத்தவர்கள் தான் அதிமுக தொண்டர்கள், இந்தியாவில் உடையாத கட்சியே இல்லை, கவிழாத ஆட்சியே இல்லை என்ற அவர்,  ஆனால் இத்தனை சூழ்ச்சிகள் அதிகாரமிக்க இயக்கம் மத்தியில் உள்ளவர்களை எதிர்த்து வலிமையாக உள்ள இயக்கம் அதிமுக தான்,  அதிமுக தொண்டர்கள் உள்ளவரை அதிமுக வை எதுவும் செய்ய முடியாது, அதிமுக விற்கு தற்போது தேவை ஒரு வெற்றி எனவும், நாடாளுமன்ற தேர்தலில் அம்மா சொன்னதை போல எனக்கு பிறகு இந்த  இயக்கம் 100 ஆண்டு காலம் நிலை நிற்கும் என்ற எண்ணம் நிறைவேற்ற பட வேண்டும்.

பாமக வோடு இணைந்ததால் தோல்வி ஏற்ப்பட்டது,

2016ல் அதிமுக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தேர்தல , பாஜக வோடு இணைந்ததால் சிறுபாண்மையினர் வாக்கை இழந்தது போல பாமக வோடு இணைந்ததால் தோல்வி ஏற்ப்பட்டது, தேர்தல் வந்தால் தான் ஏலம் விடுக்கிறது என பாமகவை சாடினார். மாலை வரை பேசியவர்கள் இரவு ஏன் பிஜேபி யை அழைத்தீர்கள் என கேள்வி  எழுப்பிய அவர் பாமக சமூதாய மக்களை ஏமாற்ற வேண்டாம் .  பெட்டி வேண்டுமென்றால் வாங்கி செல்லுங்கள் என பாமகவை கடுமையாக சாடினார் .

நம்பிக்கை துரோகிகளுக்கு யார் என்று காட்ட வேண்டும் , இந்த கூட்டணி 2011ல் அதிமுக , தேமுதிக தொண்டர்கள் ஒட்டு மொத்த குரலால் கூட்டணி உறுதியானது. வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்கிற திமுகவை எதிர்க்கட்சிக்கு கூட தகுதில்லாமல் ஆக்கியது தான் இந்த கூட்டணி இது வெற்றி கூட்டணி , அதிமுக சார்பில் ஒரு வாக்குசாவடிக்கு 52 பேர் அமைக்கப்பட்டுள்ளனர். அனைத்து கட்சி வாக்குகளை பெற வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்,  நடுநலையானவர்கள் வாக்கு தான் வெற்றியை உறுப்படுத்தும், திமுகவினர் கூட இரட்டை இலையில் வாக்களிக்க காத்துகிடக்கின்றனர்,

திமுகவினரே திமுக வேட்ப்பாளர்களை அழிப்பார்கள்

திமுகவினரே திமுக வேட்ப்பாளர்களை அழிப்பார்கள் எனவும் அமைச்சர்கள் கூட ரப்பர் ஸ்டாம்ப்களாக உள்ளதாகவுன்,  ஒன் வே தான்  மட்டும் தான் “நோ அவுட் கோயிங்” என நகைச்சுவையாக விமர்சித்த சி.வி.சண்முகம்... திமுக ஆட்சியில் ஒன்றும் நடக்க வில்லை, சொன்ன வாக்குறுதிகள் எதும் நிறைவேற்றபடவில்லை, தமிநாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை, கற்பழிப்பு, கொலை கொள்ளை என  தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதுள்ளதாகவும், பிஜேபி ஆட்சியி ஒரு தொழிற்சாலை கூட இல்லை, ஆயிரம் பேருக்கு வேலை என அண்ணாமலை சொல்ல முடியுமா, பிரதமர் தமிழ்நாட்டில  கன்னியாகுமரி வரை 100 தடவை நடந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என பிரதமரை விமர்சித்த அவர் ஏற்கனவே தொடங்கப்பட்ட நெய்வேலி தொழில் சாலை என்ன ஆனது ,  பாமக அன்புமணி போராட்டம் நடத்தினாரே , தற்போது  கூட்டணி வைத்துள்ள பாமக வால் என்.எல்.சி சுரங்கத்தை நிறுத்த முடியுமா என்றும்,  வாக்குறுதியாவது கொடுக்க முடியுமா  எனவும், 3வது சுரங்கத்தை முற்றிலும் மூடிவிடுவோம் என சொல்ல தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், இப்படி மக்களை ஏமாற்றி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான் என்றும்  2011ம் ஆண்டு போல 2024 ம் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றார். அதே போன்று 2026ம் ஆண்டும் ஆள தெரிந்த எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் , உங்களால் முடியும்.. உங்களால் நிச்சியம் முடியும் என கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget