Lok Sabha Election 2024 Dates LIVE: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! அரசு அலுவலகங்களில் போட்டோக்கள், பதாகைகள் நீக்கம்
Lok Sabha Election 2024 Dates LIVE Updates: மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக, தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து உடனடி விவரங்களை அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
Lok Sabha Election 2024 Dates LIVE:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல் கட்டட்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு:
18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், பிற்பகல் 3 மணியளவில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும். நாடு முழுவதும் சுமார் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலமும் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவற்றிற்கான தேர்தலும் ஒரே அடியாக நடத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள 17வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம், வரும் ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக புதிய மக்களவைக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
CEC Rajiv Kumar will address the Press Conference on General Elections 2024 together with EC's Gyanesh Kumar and Sukhbir Singh Sandhu on 16th March, 2024 (3 PM).
— Election Commission of India (@ECISVEEP) March 15, 2024
Watch live: https://t.co/59AMghghkN
Join us in celebrating “#ChunaavKaParv” where every vote counts!!#IVote4Sure pic.twitter.com/9GtRM3OFoO
அரசியல் கட்சிகள் தீவிரம்:
பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பல மாநிலங்களில் தனித்தும், பலவீனமாக உள்ள பகுதிகளில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பாஜக போட்டியிட தயாராகி வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள அக்கட்சி, பல முன்னாள் முதலமைச்சர்களை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கியுள்ளது. மறுமுனையில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டிலும், திமுக தலைமையில் I.N.D.I.A. கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், ஒட்டுமொத்த தேர்தல் களமும், ஒருபுறம் பாஜக மறுபுறம் பாஜக எதிர்ப்புகட்சிகள் என பிரிந்துள்ளது.
முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதற்கட்ட மக்களவை தேர்தலிலேயே, 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்வதும், இதையே உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
Lok Sabha Election 2024 Dates LIVE: அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் !
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
Lok Sabha Election 2024 Dates LIVE: தேர்தல் தேதிகளை யார் குறித்துக் கொடுத்தது யார்? - செல்வப்பெருந்தகை கேள்வி
தேர்தல் தேதிகளை யார் குறித்துக்கொடுத்தது என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Lok Sabha Election 2024 Dates LIVE: வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை கட்சிகளே வெளியிடவேண்டும் - ராஜீவ்குமார்
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை கட்சிகளே வெளியிடவேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024 Dates LIVE: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிற்கான முக்கியத் தேதிகள் விபரம்!
தமிழ்நாட்டில் வேட்புமனு மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். பிரச்சாரம் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 16ஆம் தேதி. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Lok Sabha Election 2024 Dates LIVE: ஏழு கட்ட தேர்தல் தேதி விபரங்கள்
முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19லும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெறுகின்றது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 4ஆம் கட்டத் தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஐந்தாம் கட்டத்தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. 6ஆம் கட்டத்தேர்தல் மே 25ஆம் தேதியும் ஏழாம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.