மேலும் அறிய
Advertisement
பாஜகவோடு, பாமக கூட்டணி என்பது ஒரு கேவலமான அரசியல் - டி.ராஜா கடும் விமர்சனம்
இந்த தேர்தலில் பாமகவுக்கு மக்கள் படிப்பினையை தரவேண்டும். பாமகவுக்கு தோல்வியை மக்கள் கொடுக்க வேண்டும்.
விழுப்புரம்: பாஜகவோடு, பாமக கூட்டணி என்பது ஒரு கேவலமான அரசியல், ஒன்றிரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்காக கொள்கைகளை அடகு வைத்துவிட்டார் ராமதாஸ் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு வைத்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாஜக கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மத நல்லிணக்கம், நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறைகள், சமூகநீதிக் கோட்பாடுகள் இவை அனைத்தும் தகர்க்கப்பட்டு நாடு என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்சியாக இல்லை. பாசிச சர்வாதிகார ஆட்சியாக இருந்துவந்துள்ளது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எந்த பங்கும் இருந்ததில்லை. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுபிடியாக இருந்தவர்கள் தான் ஆர்எஸ்எஸ்-யை சேர்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் கருவிதான் பாஜக. நாட்டின் சுதந்திரத்தை பற்றி அறியாத கட்சி பாஜக. பாஜகவோடு பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் விளக்கம் அளிக்க தயாரா?.
மருத்துவர் ராமதாஸ் வீட்டிற்கு ஒருமுறை சென்று இருக்கிறேன். அங்கு காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று தலைவர்களின் சிலைகளை வைத்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்ன விதமான கொள்கை என ராமதாஸ் விளக்க வேண்டும். பாஜகவோடு, பாமகவுக்கு என்ன கொள்கை உடன்பாடு என ராமதாஸ் சொல்ல தயாரா?. ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார். இது ஒரு கேவலமான அரசியல். ஒன்றிரண்டு பாராளுமன்ற இடங்களுக்காக கொள்கைகளை அடகு வைத்துவிட்டார் ராமதாஸ். அம்பானி, அதானிகளின் கூட்டாளியான பாஜகவோடு, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைக்கலாமா. இந்த தேர்தலில் பாமகவுக்கு மக்கள் படிப்பினையை தரவேண்டும். பாமகவுக்கு தோல்வியை மக்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion