மேலும் அறிய

புதுச்சேரியில் விடுதலைக்கு பிறகு 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு...!

’’1968, 2006 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின்படி மூன்றாவது முறையாக தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது’’

புதுச்சேரி வரலாற்றில் சுதந்திரத்துக்கு பின் இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. முதன்முறையாக கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி 38 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

புதுச்சேரி வரலாற்றில் 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையெடுத்து வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இடஒதுக்கீடு வாரியாக வார்டுகள் பிரிக்கபப்ட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்டார். இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்றுகட்டங்களாக தேர்தலை நடத்தப்படுகிறது. இதற்காக தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ள நிலையில் முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி வரலாற்றில் 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரத்தை பொறுத்தவரை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வாக்களிக்கலாம் எனவும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் ஆவர்

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget