Local body election | திமுக அரசு மத்திய அரசுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது - உதயநிதி ஸ்டாலின் கும்பகோணத்தில் பரப்புரை
’’எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தின் கடன் சுமையை 5 லட்சம் கோடியாக வைத்து சென்ற இக்கட்டான நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற 8 மாதங்களில் தமிழகத்தின் நிதி நிலைமை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது’’
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்டு, பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தின் கடன் சுமையை 5 லட்சம் கோடியாக வைத்து சென்ற இக்கட்டான நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற 8 மாதங்களில் தமிழகத்தின் நிதி நிலைமை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
திமுக அரசின் ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். அதற்கான எல்லா விதமான சட்ட போராட்டங்களையும் செய்வோம். மக்களவையில், தமிழகத்தை பார்த்து பிரதமர் மோடி திருந்த வேண்டும். பாஜகவால் ஒருநாளும் தமிழகத்தை ஆள முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய அரசுக்கு உதாரணமாக கூறும் அளவிற்கு தமிழகம் சிம்மசொப்பனமாக இருக்கின்றது. இதே போல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
வாக்கு வேட்டைக்கு வந்து பாம்பு வேட்டையில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்
கும்பகோணம் 14-வது வார்டு பகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோகரன் கும்பகோணம், பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் கம்பிபிட்டரான செந்தில் என்பவரது வீட்டினுள் பாம்பு புகுந்தது, இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.
இதனையறிந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் மனோகரன், தீயணைப்பு துறையினருக்கு வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டது என தகவல் தெரிவித்தார். அங்கு தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொழிலாளியின் வீட்டில் புகுந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
பாம்பு வீட்டிற்குள் புகுந்து விட்டது என்று அறிந்தவுடன், பாம்ரை பிடிப்பதற்கு தீவிரமாக ஈடுபட்ட வேட்பாளருக்கு நன்றியை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பாம்ப வேட்டையில் ஈடுபட்ட வேட்பாளருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவிட்டு வருகின்றனர். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் பாம்பு வேட்டையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.