மேலும் அறிய

Local body election | காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் தற்கொலையில் சந்தேகம் உள்ளது - ஜி.கே.வாசன் எம்.பி பேட்டி

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களில் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது, இது தேவையற்ற செயல்

கும்பகோணத்தில் தமாகா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோயில், சோலையப்பன் தெரு உள்ளிட்ட தமாகா வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்க தேர்தல் ஆணையம் தேர்தல் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். ஆளும் கட்சியின் அதிகாரம் பணம் ஆள் பலம் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது.

காஞ்சிபுரத்தில்  வேட்பாளர் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் அதிகம் உள்ளது இதற்கு விடை காண வேண்டும். தேர்தல் களம் எதிர்க்கட்சிக்கு சாதகமாக உள்ளது. பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களில் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது, இது தேவையற்ற செயல். இது உள்ளாட்சி தேர்தல், மக்களால் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் மக்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் நடக்கவேண்டும்.

Local body election | காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் தற்கொலையில் சந்தேகம் உள்ளது - ஜி.கே.வாசன் எம்.பி பேட்டி

தமிழக மீனவர்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது. இலங்கை அரசுடன் இந்திய  அரசு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இலங்கை அரசு பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற இந்தியா பல கோடி டாலர்களை வழங்கி உதவும் நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்குவதையும், படகுகளை ஏலம் விடுவதையும் ஒரு போதும் த.மா.கா ஏற்காது. எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்,அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

மத்திய அரசின் நடப்பாண்டு பட்ஜெட், வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும். தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும்  முனைப்பு நோயை கட்டுப்படுத்தி மக்களை காக்கும், இதில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. தஞ்சை,  கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் ஒவ்வொரு எம்எல்ஏ., தொகுதிகளும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சிக்காலத்தில் செய்யாததை அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் செய்துள்ளனர்.

Local body election | காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் தற்கொலையில் சந்தேகம் உள்ளது - ஜி.கே.வாசன் எம்.பி பேட்டி

குறிப்பாக தஞ்சை மாநகராட்சி அந்தஸ்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அடங்கும். அதுபோல் கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சிக்கு மாநகர அதிமுக செயலாளர் ராமநாதன், முன்னாள் செயலாளர் சேகர் ஆகியோர் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநில அரசிடம் கும்பகோணத்திற்கு தேவையான வளர்ச்சியை கேட்டு பெற்று தந்துள்ளனர். . எனவே கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சி பெற நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு பெற்றி பெற்று விட்டால் கண்டிப்பாக அதிமுக, தமாகா நல்லாட்சி கொடுக்கும். எங்களது வேட்பாளர்கள் கும்பகோணத்தில் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சொன்ன வாக்குறுதிப்படி நிறைவேற்றித் தருவார்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget