Local Body Election | காங்கிரஸ் நிர்வாகி திட்டியதால் பாஜக வேட்பாளர் சாலையில் தர்ணா
’’தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் எந்தவித பிரச்சனைகள் ஏற்படாமல் காவல் துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்பின்னர் கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர்’’
சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி திட்டியதாக பாஜக வேட்பாளர் வாக்குப் பதிவு மையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஹேமா மாலினி ஜோசப் பீட்டர் என்பவர் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகி பாஜக நிர்வாகியை திட்டியதாக காவல் துறையிடம் புகார் கொடுத்தபோது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறி ஹேமா மாலினி சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்மேப்பல் சக்தி தலைமையிலான தொண்டர்கள் அந்த பகுதிக்கு வருகை தந்ததால் பதட்டம் நிலவியது பின்னர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்குமாறு சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் தெரிவித்தார் பின்னர் பாஜக வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்ததும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் எந்தவித பிரச்சனைகள் ஏற்படாமல் காவல் துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்பின்னர் கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர்