Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளதையடுத்து வாக்கு சாவடிகளில் வாக்கு பெட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரம்.
![Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம் Kerala Lok Sabha Election 2024 Voting for all 20 parliamentary constituencies in one phase tomorrow - TNN Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/bd82ac01363252a3c54301938cf6e3211714028861119739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து, வரும் 26ஆம் தேதி அதாவது நாளை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கேரள உட்பட கர்நாடக மாநிலங்களில் நடைபெறுகின்றது. இதனையடுத்து வாக்குச்சாவடிக்களுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நடைபெற்று வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்களுக்கு காவல்துறை மற்றும் சிறப்பு இராணுவ படை வீரர்களின் உதவியுடன் வாக்கு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மையங்களான கல்வி நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
TN Weather Update: உஷார் மக்களே! 18 மாவட்டங்களில் கொளுத்தப்போகும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை!
மேலும் பொதுமக்கள் எவ்வித சிரமங்கள் இன்றி வாக்களிக்கும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம்பவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் தேர்தல் ஆணையத்தால் 144 தடை உத்தரவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வாக்குச்சாவடிகளில் தேர்தல் Amsterdam ஏப்- 26 ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!
இதனிடையே வனப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்கும் விதமாக வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வனத்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகனங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கிடையே கேரளாவில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என நக்சலைட்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உட்பட பல தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)