மேலும் அறிய

J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்

J-K Election: ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

J-K Election: ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 40 தொகுதிகளில், 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஜம்மு & காஷ்மீர் 3ம்கட்ட வாக்குப்பதிவு:

முன்னாள் துணை முதலமைச்சர்கள் தாரா சந்த் மற்றும் முசாபர் பெய்க் உட்பட 415 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும், மூன்றாவது மற்றும் கடைசி கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற உள்ளது. ஜம்மு, உதம்பூர், சம்பா, கதுவா, பாரமுல்லா, பந்திபோரா மற்றும் குப்வாரா ஆகிய 40 சட்டமன்றப் தொகுதிகளில்,  5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏழு மாவட்டங்களில் 20,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடி ஊழியர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 24 சட்டமன்ற தொகுதிகளிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குச்சாவடி விவரங்கள்:

இந்த தேர்தல் கட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள், வால்மீகி சமாஜ் மற்றும் கோர்க்கா சமூகத்தினர், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். 

தேர்தலில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் 50 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 43 சிறப்புத் திறன் கொண்ட நபர்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களும், இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் 40 வாக்குச்சாவடி மையங்களும், மற்றும் 45 பசுமை வாக்குச்சாவடி மையங்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எல்லையில் வசிப்பவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைக்கு அருகில் 33 தனித்துவமான வாக்குச் சாவடிகள் மற்றும் 29 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நட்சத்திர வேட்பாளர்கள்:

415 வேட்பாளர்களில், மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜ்ஜத் லோன், குப்வாராவில் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் இந்தியத் தலைவர் தேவ் சிங், உதம்பூரில் உள்ள செனானி தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற முக்கிய வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் ராமன் பல்லா (ஆர்எஸ் புரா), உஸ்மான் மஜித் (பந்திபோரா), நசீர் அகமது கான் (குரேஸ்), தாஜ் மொகிதீன் (உரி), பஷரத் புகாரி (வாகூரா-க்ரீரி), இம்ரான் அன்சாரி (பட்டான்), குலாம் ஹசன் மிர் ( குல்மார்க்), சவுத்ரி லால் சிங் (பசோஹ்லி), ராஜீவ் ஜஸ்ரோட்டியா (ஜஸ்ரோட்டா), மற்றும் மனோகர் லால் சர்மா (பில்லவர்) ஆகியோர் இன்று களத்தில் உள்ளனர். முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்த் சம்பத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும், பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிடிபி முன்னாள் தலைவர் முசாபர் பெய்க் போட்டியிடுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

அமைதியான மற்றும் பயங்கரவாதம் இல்லாத தேர்தலை உறுதி செய்வதற்காக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு &காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. வாக்குச் சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறைகள் மற்றும் சாய்வுதளங்கள் உட்பட உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (AMFகள்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. பார்வையற்றோருக்கான சக்கர நாற்காலி மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரெய்லி பட்டியல் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 2019 இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் முதல் தேர்தலின் கடைசி கட்டம் இதுவாகும். செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்டத்தில் 61.38% மற்றும் செப்டம்பர் 26ம் தேதி அன்று நடைபெற்ற இரண்டாவது கட்டத்தில் 57.31% வாக்குகளும் பதிவானது. பதிவாகும் மொத்த வாக்குகளும் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget