ABP-Cvoter Exit Poll Results 2021 Live: 2021 கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது மார்க்சிஸ்ட்ABP- C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்
Exit Poll Results 2021 Live Abp-Cvoter Exit Poll Result 2021 Election 2021 Abp-Cvoter Exit Poll: ABP நாடு வெளியிட்டுள்ள 2021 அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..
LIVE
Background
இந்தியாவின் நூற்றாண்டு அனுபவம் கொண்ட ABP நிறுவனம், ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது. இதில் அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..
மீண்டும் மார்க்சிஸ்டா: கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?
ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கேரளாவில் இம்முறையும் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
ABP-C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்: அசாமில் மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக?
ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அசாம் மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறைந்த வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரியவந்துள்ளது.
அசாம் தேயிலைத் தோட்டங்களில் கருத்துக்கணிப்பு நிலவரம்
கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 28-30 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 6-8 இடங்களும் கிடைக்கும்.இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.வாக்குச் சதவிகிதத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி(48.2), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(42.5), இதர கட்சிகள்(9.5) சதவிகிதங்களாக இருக்கும்
வடக்கு அசாமில் கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 0-2 இடங்களும் கிடைக்கும்.ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும் பட்சத்தில் இங்கு இதர கட்சிகளுக்கு இரண்டு இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.வாக்கு சதவிகிதம் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி(51.3), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(44.3), இதர கட்சிகள்(4.3) சதவிகிதங்களாக இருக்கும்.
அசாம் கீழ் பகுதியில் கருத்துக்கணிப்பு நிலவரம் சொல்வதென்ன?
தேசிய ஜனநாயக கூட்டணி 9-11 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 21-23 இடங்களும் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி(36.8), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(53.9), இதர கட்சிகள்(9.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும்