ABP-C-Voter Exit Poll results | கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது மார்க்சிஸ்ட்ABP- C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்
ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கேரளாவில் இம்முறையும் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் இம்முறையும் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும்போது இம்முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கணிசமாக தொகுதிகள் அதிகரித்துள்ளது. எனினும் ஆளும் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதன் முழுவிபரம் இதோ:
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி (எல்.டி.எஃப்) 91 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான (யுடிஎஃப்) கூட்டணி 47 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. பாஜக ஒரு இடத்தில் மட்டும் வென்று இருந்தது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி ஆளும் எல்.டிஎஃப் கூட்டணிக்கு 71-77 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக்கு 62-68 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பாஜகவிற்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாக்கு சதவிகிதம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி 43.5 சதவிகிதம் பெற்று இருந்தது. 2021ஆம் ஆண்டு அது 0.7 சதவிகிதமாக குறைந்து 42.8 ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 38.8 சதவிகிதம் வாக்குகளை பெற்று இருந்தது. அது 2021-ஆம் ஆண்டில் 2.6 சதவிகிதம் அதிகரித்து 41.4 சதவிகிதமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் பாஜக மற்றும் இதர கட்சிகளின் வாக்கு சதவிகிதம் இம்முறை குறையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி பாஜக 2016 தேர்தலில் 14.9 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தது. எனினும் இந்தத் தேர்தலில் அது 13.7ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 2016ஆம் ஆண்டு 2.8 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தன. இது 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 0.7 சதவிகிதம் குறைந்து 2.1-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியான முடிவுகள்:
மண்டல வாரியாக கருத்து கணிப்பு முடிவுகளை 2016-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் ஒப்பிட்டு பார்க்கும் போது, அனைத்து மண்டலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு குறைந்துள்ள மண்டல வாரியான வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவு என்பதால் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மத்திய கேரளா:
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய கேரளாவில் எல்.டி.எஃப்(41), யு.டி.எஃப்(39.9), தேசிய ஜனநாயக கூட்டணி(15.3), இதர கட்சிகள்(3.8) என்ற அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு மட்டும் அதிகரித்து மற்ற கட்சிகளுக்கு குறைந்துள்ளது. அதன்படி இம்முறை வாக்கு சதவிகிதம் எல்.டி.எஃப்(40.9), யுடிஎஃப்(41.7),தேசிய ஜனநாயக கூட்டணி(15), இதர கட்சிகள்(2.4) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கேரளாவில் கடந்த 2016ல் மொத்தமுள்ள 41 இடங்களில் எல்.டி.எஃப்(22), யு.டி.எஃப்(18), தேசிய ஜனநாயக கூட்டணி(0), இதர கட்சிகள்(1) ஆகிய இடங்களில் வென்று இருந்தன. 2021-ஆம் ஆண்டு இதுவே எல்.டி.எஃப் கூட்டணிக்கு 16-18 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 23-25 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது மத்திய கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 5-6 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 5 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
வடக்கு கேரளா:
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வடக்கு கேரளாவில் எல்.டி.எஃப்(44.1), யு.டி.எஃப்(40.1), தேசிய ஜனநாயக கூட்டணி(12.9), இதர கட்சிகள்(2.9) என்ற அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு மட்டும் அதிகரித்து மற்ற கட்சிகளுக்கு குறைந்துள்ளது. அதன்படி இம்முறை வாக்கு சதவிகிதம் எல்.டி.எஃப்(43.5), யுடிஎஃப்(42.7),தேசிய ஜனநாயக கூட்டணி(11), இதர கட்சிகள்(2.8) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கேரளாவில் கடந்த 2016ல் மொத்தமுள்ள 60 இடங்களில் எல்.டி.எஃப்(37), யு.டி.எஃப்(23), தேசிய ஜனநாயக கூட்டணி(0), இதர கட்சிகள்(0)ஆகிய இடங்களில் வென்று இருந்தன. 2021ஆம் ஆண்டு இதுவே எல்.டி.எஃப் கூட்டணிக்கு 34-35 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 24-26 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது வடக்கு கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 2 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
தெற்கு கேரளா:
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெற்கு கேரளாவில் எல்.டி.எஃப்(44.6), யு.டி.எஃப்(35.9), தேசிய ஜனநாயக கூட்டணி(17.5), இதர கட்சிகள்(2) என்ற அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு மட்டும் அதிகரித்து மற்ற கட்சிகளுக்கு குறைந்துள்ளது. அதன்படி இம்முறை வாக்கு சதவிகிதம் எல்.டி.எஃப்(41.9), யுடிஎஃப்(40.6),தேசிய ஜனநாயக கூட்டணி(16.4), இதர கட்சிகள்(1.1) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரளாவில் கடந்த 2016ல் மொத்தமுள்ள 39 இடங்களில் எல்.டி.எஃப்(32), யு.டி.எஃப்(6), தேசிய ஜனநாயக கூட்டணி(1), இதர கட்சிகள்(0)ஆகிய இடங்களில் வென்று இருந்தன. 2021ஆம் ஆண்டு இதுவே எல்.டி.எஃப் கூட்டணிக்கு 21-23 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 15-17 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது தெற் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 10 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 10 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.