மேலும் அறிய

exclusive ; "எனக்கும் 'சுந்தர் சி'க்கும் போட்டியில்லை... பிடிஆர் உடன் தான் நேரடி போட்டி" - தவெக வேட்பாளர் முஸ்தபா சரவெடி !

விஜய் பெரும் அலை வீசுகிறது. அதில் நாங்கள் வெற்றிபெருவோம். மதுரை மக்கள் சாதி, மதம் கடந்து எங்களுக்கு வாக்களிப்பார்கள். - தவெக நட்சத்திர வேட்பாளர் பேட்டி.

மதுரை மத்திய தொகுதி, 2026 தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. மீண்டும் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், NDA கூட்டணி சார்பில் இயக்குநர் சுந்தர் சியும் களம் காண்கின்றனர். இந்த சூழலில் தவெக நட்சத்திர வேட்பாளர் முஸ்தபா அவர்கள் போட்டியிடுகிறார். இதனால் மதுரை மத்திய தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தவெக வேட்பாளர் முஸ்தபா அவர்களை Abp நாடு சார்பில் களத்தில் சந்தித்து பேசினோம்.

மதுரை மத்திய தொகுதியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

மதுரை மத்திய தொகுதி சிறப்பாக இருக்கிறது. அதே போல் தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு வரவேற்பு உள்ளதை காணமுடிகிறது. மதுரையில் நடந்த எங்களது மாநாட்டில் தலைவர் சொல்லும் போது மதுரை கிழக்கு விஜய், மதுரை மத்தி விஜய், உசிலம்பட்டி விஜய் என அறிமுகம் செய்தார். இதனால் வேட்பாளர்கள் அனைவரையும் மக்கள் விஜயின் முகமாக பார்க்கின்றனர். 75 வயது மூதாட்டி கூட எங்களை ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். இதனால் வெற்றி முகம் தெளிவாக தெரிகிறது.

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகரன் மற்றும் சுந்தர் சி தேர்தலில் பேட்டியிடுவதை எப்படி பார்க்கின்றீர்கள் !

10 ஆண்டுகள் மத்திய தொகுதியில் அரசியல் களத்தில் உள்ளார் பிடிஆர். ஆனால் மக்கள் பிரதிநிதியாக எதுவும் செய்யவில்லை. அதே போல் இயக்குநர் சுந்தர் சி தமிழ்நாட்டில் எந்த பிரச்னைக்கும் நின்றதில்லை. ஆனால் திடீர் என்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். ஆனால் விஜய் 15 ஆண்டுகளா மக்கள் பணியில் உள்ளார். நீட் தேர்வு, மடப்புரம் அஜித் குமார் இறப்பு உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார். இதனால் விஜயின் வேட்பாளராக உள்ள எங்களை மக்கள் வரவேற்கின்றனர்.

மதுரையில் என்ன திட்டங்களை கொண்டு வருவீங்க?

மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ., பிடிஆர் நிதி அமைச்சராக இருந்துள்ளார். ஆனாலும் இந்த தொகுதி மேம்படவில்லை. மதுரை மத்திய தொகுதியில் மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. ஆனால் போதுமான வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. மீனாட்சியம்மன் கோயில் மேம்பட பசுமைப் பூங்கா கூட இல்லை. போதுமான உடற்பயிற்சி கூடம் கொண்டுவரவில்லை, போதுமான விளையாட்டு மைதானம் இல்லை, கல்விச்சாலை இல்லை, பாதாளசாக்கடை திட்டம் இல்லை.  இப்படி பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டுவருவோம்.

மதுரை மத்திய தொகுதியில் நீங்க நிற்ககாரணம்?

விஜய் பெரும் அலை வீசுகிறது. அதில் நாங்கள் வெற்றிபெருவோம். மதுரை மக்கள் சாதி, மதம் கடந்து எங்களுக்கு வாக்களிப்பார்கள். விஜய் அவர்கள் நிற்க சொன்னதால் இந்த தொகுதியில் தைரியமாக நிற்கிறேன்.

குஷ்பு - சுந்தர் சி பிரச்சாரம் உங்களை பாதிக்குமா?

குஷ்பு - சுந்தர் சியின் சினிமா கவர்ச்சியை பார்க்கமாட்டார்கள். உழைப்பவர்களை தான் நம்புவார்கள். விஜய் முகத்தை வைத்து நாங்கள் வெற்றிபெருவோம். அதனால் பாதிப்பு எங்களுக்கு இல்லை.

மதுரை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யவில்லையே?

மதுரையில் விஜய் பிரச்சாரம் செய்திருந்தால் பெரும் எழுச்சிபெரும். ஆனால் மக்கள் சிரமப்படவேண்டாம் என நினைப்பார். மதுரை சித்திரைத் திருவிழா உள்ளது. இந்த சமயத்தில் தொல்லை கொடுக்க வேண்டாம் என நினைப்பார். அவர் மதுரை வரவில்லை என்றாலும் அவரின் அலை உலக தமிழர்கள் உள்ளத்தில் அடித்துள்ளது. அதனால் சரிவு என்பது ஏற்படாது” என்றார்.

தலைப்பு செய்திகள்

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget