மேலும் அறிய

Erode East Bypoll:அனல் பறக்கும் வாக்குப்பதிவு..! தி.மு.க. - அ.தி.மு.க.வினரிடயே தள்ளுமுள்ளு..!

இடைத் தேர்தல் நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இடைத் தேர்தல் நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தள்ளுமுள்ளு:

இந்நிலையில், பெரியண்ணா வீதியில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காவல் துறையினருடன் அந்த வீட்டிற்கு வந்த அதிமுகவினர் அங்கிருந்த திமுகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது தள்ளு -  முள்ளுவாக மாறிய நிலையில், காவல் துறையினர் திமுக மற்றும் அதிமுகவினரை விலக்கினர். மேலும், இங்கு ஏன் அனைவரும் கூடியுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ”நாங்கள் அனைவரும் உறவினர்கள், சந்திக்க வந்துள்ளோம்” என கூறியுள்ளனர். 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதில், காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போதைய நிலவரப்படி அதாவது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் 

வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரையில் 10.10% வாக்குபதிவாகியுள்ளது.  அதாவது மொத்தமுள்ள 2,27,547 வாக்காளர்களில்  22,973 பேர் வாக்கு செலுத்தினர். 

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

32, 562 ஆண்களும், 30, 907 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 63,469 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  இது மொத்த வாக்காளர்களில் 27.89% ஆகும். 

பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்டுள்ள  32 வாக்குச்சாவடிகளில்  மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் ஈரோடு கிழக்கு தொகுதியின் மீது குவிந்துள்ளது. 

வாக்காளர்களுக்கு பணம்? 

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், கொலுசு, புடவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. களமிறங்கிய அரசியல் கட்சியில் ஆளும் கட்சியும் , எதிர் கட்சியுமான திமுக, அதிமுக தரப்பில் வாக்காளர்களை மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல், கட்சியினர் வீடுகளையும் வாடகைக்கு எடுத்து அதில் வாக்காளர்களை தங்கவைத்து அவர்களுக்கு உணவு மற்றும் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

ஈரோடு கிழக்கில் உள்ள கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையே வாக்களித்தார். வாக்களித்த பின் பேட்டியளித்த அவர்,” ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80 சதவீத மக்கள் கை சின்னத்திற்கு வாக்களித்து முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலப்படுத்துவார்கள். முதலமைச்சரின் 20 மாத கால ஆட்சிக்கும், ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே திமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. எதிர் அணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை  இந்த இடைத் தேர்தலில் சந்திப்பார்கள்.  கட்சி பேதமின்றி தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாத அலுவலகங்களை மூடியது. இந்த தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது” என கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget