மேலும் அறிய

AAP Song: ஆம் ஆத்மி பரப்புரை பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை! எதற்காக? அப்படி என்ன இருக்கிறது?

AAP Song Ban: ஆம் ஆத்மி பரப்புரை பாடலுக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடைக்கு அக்கட்சி தலைவர்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான 'ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே' பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஆம் ஆத்மி பாடலுக்கு தடை:

கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான  'ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே'  வெளியானது. சுமார் 2 நிமிடம் கொண்ட இப்பாடலை,  ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதியுள்ளார். 

இந்தப் பாடலானது, பாஜக கட்சியையும், புலானாய்வு அமைப்புகளையும்  தவறான நோக்கில் குறிப்பிடுப்படுவதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , டெல்லி முதலமைச்சர் சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகவும், இந்த பாடலை மாற்றியமைக்குமாறு, தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும், இந்த முடிவை கட்சி ஏற்கவில்லை என்றால், மாநில அளவிலான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

AAP Song: ஆம் ஆத்மி பரப்புரை பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை! எதற்காக? அப்படி என்ன இருக்கிறது?

”பாஜக செய்தால் சரியா?”

இந்நிலையில், ஆம் ஆத்மி பாடல் தடை குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலானது பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  எங்கள் பாடலில் பாஜக பெயர் இடம் பெயரவில்லை. சர்வாதிகாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது, பாஜக கட்சியை கூறியதாக எடுத்துக் கொள்கிறார்களா என கேட்டார்.

ஒரு கட்சியின் பரப்புரை பாடலுக்கு தடை விதிப்பது , இதுவே முதல் முறை. பாஜக , தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது என அமைச்சர்  ஆதிஷி கண்டனத்தை பதிவு செய்தார். 

Also Read: UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?

Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?

Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!

ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்

Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்

13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்

Embed widget